நிழல் கூட…

நிழல் கூட….

நிழல் கூட
நிரந்தரமாய் தெரிவதில்லை

தெரிந்தாலும்
விழும்
உருவத்தை போல்
இருப்பதில்லை

அச்சு அசலாய்
உன்னை போல்
விழ

நான் என்ன
கண்ணாடியா?
எதிர் கேள்வி
கேட்கிறது

அது மட்டுமல்ல

நிழலின் உருவம்
உன்னுடையதாய்
இருந்தாலும்

எங்கள் மேய்ப்பன்
வெளிச்சம் மட்டுமே
என்கிறது

ஓ’ நம்
நிழலை நாம்
நிர்மானிப்பதில்லையோ?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Dec-23, 11:46 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 96

மேலே