துண்டு செய்தி

டோக்கன்

நுழைவாய்
சுயமாய் உண்ண
அனுமதி வேண்டும் !

சவம்

உள்ளே சிவன் இல்லை
கூப்பிட வரமாட்டான் !
எங்கே பிறப்பு பத்திரம் !


நரம்பில்லா நாக்கு

உள்ளே வா
என்ன வேண்டும்
வெளியே போ !

பார்வை

அவள் கீறிய கோடுகள்
மின்னலைப் ஒக்கும்
பார்த்தவன் பரிதவிக்க !


எஜமான்

அளந்து போடுவான்
மாதம் முடிய
சிதறிய சில்லரையை


இல்லாள்

முன்பு தோழி
இப்போ மனைவி
இனி உயிர்……..


தண்ணீர் பால்

சுண்டும் பால்
மேல்ஆடை மறுக்கிறது
பசு மழையில் நனைய

பாராட்டு

கைதட்ட துளி மறந்து என் பிள்ளை நிற்க
அவன் பெயர் ஒலிக்க மேடை அதிரியது !
நான் மலைத்தேன் !

எழுதியவர் : மு.தருமராஜு (14-Feb-25, 8:20 pm)
Tanglish : thundu seithi
பார்வை : 7

மேலே