கடைசி வரை
இறுகி போகும் இதயத்தை
இதழால் ஊதி முத்தமிடு
உனை நினைக்கும் உள்ளத்தை
உயிர் உள்ள வரை உருக விடு
தினம் உழைக்கும் கைகளை
இறுக பற்றி இன்பம் இடு
தீயென தீண்டா தேகத்தை
நிலவென சுற்றி இருளை அறு .
கண்ணீர் சிந்தும் கண்களுக்கு
கடைசி வரை காதல் கொடு.
- காதலாரா