காதலாரா - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  காதலாரா
இடம்:  தருமபுரி ( தற்போது கோவை )
பிறந்த தேதி :  02-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Dec-2013
பார்த்தவர்கள்:  4474
புள்ளி:  5175

என்னைப் பற்றி...

நானும் வாழ்க்கை பயணி ..rnஅன்னை காளியம்மா - வின் அன்பு rnதந்தை கிருஷ்ணன்rnஅவர்களின் நம்பிக்கை ..rnrnநிழலையும் நீரையும்rnகாணாமல் காலம் கடத்தும்rnஎன் கெட்டுப்பட்டி கிராமத்தை rnதாங்கும் மாவட்டம் தர்மபுரி ..rnrnஎன் இதயம் பறித்து rnஅதற்கும் சிரித்து ..rn"அண்ணா" - என அழைத்து..rnஅன்பை அளிக்கும்rnசெல்ல தங்கை மூவர் ..!!rnrnஎன் தனிமை வாழ்வைrnஅன்பால் நிறைத்துrnஎன்னை மதித்துrnநிழலாய் நிற்கும் rnதங்கை சங்கீதா...rnrnஅறிவின் மையத்தில் நின்றுrnவீரத்தின் விளிம்பில்rnவிழி வைத்துrnகோவம் கொள்ளும் rnகுழந்தை சந்தியா ...rnrnஇன்னல் பல கண்டுrnபாசமாய் பழகிrnபுன்னகை பூவை rnதவறாமல் தரும் தங்கம் பாரதி rnrnஇவர்களை பிரிந்துrnஎங்கோ வாழும்rnஎனக்குrnகனவில் வந்துrnகன்னம் கிள்ளிrnகவிதை சொல்லும் !!rnகாதலி என்றும் நினைவில் ...rnrnrnகைபேசி: +91 7402040707rnE-mail : ycanturaj@gmail.com rnrn

என் படைப்புகள்
காதலாரா செய்திகள்
காதலாரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2024 11:49 am

வற்றிய கிணறு  - காதலாரா
 ~~~~~~~~~~~~~~~~~~~~ 

அந்த வற்றிய கிணறை
பார்க்கும் பொழுதெல்லாம்

ஆறாக அழுகை விழுகிறது
ஆறாத பெருந்துயர் விரிகிறது

வஞ்சத்தின் முகம் சிரிக்கிறது
நெஞ்சத்தின் கனம் உடைகிறது

சோகம் சுமக்கும் தாகம்  
கல் இடுக்கில் வளர்கிறது

வாய் பொத்தி விழும் கண்ணீர்
கன்ன சறுக்கில் படிக்கிறது  

தேய்ந்து போன கைகளில்
கவலை பேய் போல் பாய்கிறது

ஓய்ந்து கிடைக்கும் மூளையில்  
காய்ந்த ரத்த ஏடு படர்கிறது

துடித்து கொல்லும் இதயத்தில்
தனிமை நெருப்பே கொதிக்கிறது

வெடித்து சிதறும் உடலுக்குள்
பூமியின்  தீயே கிடக்கிறது

அந்த வற்றிய கிணற்றின்
அருகில் செல்ல

மேலும்

நன்று. 23-Oct-2024 8:37 pm
காதலாரா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2018 4:04 pm

சாமி ஊரு
~~~~~~~~~~

சனிக்கிப் புடிச்ச கைக்கு
எளநிய புடுங்குனா மருந்து...
வெந்துத் தொங்குற கொடலுக்கு
சாராய பாட்டிலே விருந்து...

சாராயத்துல ஊறாத சாதி
சாணு உடம்புல நாறுது..
சனியத்த கக்கித் துப்பிட்டு
படிக்க வைடா புள்ளைய...

சேத்தோட நாத்து சேந்துட்டா
ஊத்தே செத்தாலும் வாழும்..
பனிக் காத்துக்கு பயந்தா
பல்ல கடிச்சே சாகணும் ...

எரம சாணியை ஓரமாக்
கொட்டி வச்சாலும் ஒரம்...
எந்த சாமியைத் தேர்ல
ஏத்தி வச்சாலும் பொணம்....

எவன் புள்ளப் படிச்சாலும்
கல்லு கடையே வைச்சாலும்
ஒழுக்க மயிர பழகிட்டா
ஒலக உசுர விக்காது...

- காதலாரா

மேலும்

காதலாரா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2018 10:45 am

எழு ...போரிடு ...வாழ்ந்திடு
~~~~~~~~~~~~~~~~~~~

எழுத எழுத எரியும் வரிக்குள்
வாழ்வைத் துரத்தி வாழும்
என் வீட்டுப் பிள்ளையை
உலகறியச் சுட்டு...பின்
பிணமாய் அனுப்பிய
அதிகார வர்க்கமே....

போரிடும் பாதமே ...உன்
உயிரெடுக்க போதும் ...

போகும் உயிரைப்
பிடித்து கேட்பினும்...
அடித்து கேட்பினும்
வெடித்து சொல்லும்
போரிடப் போகிறேனென்று
உயிர் காக்க சாகிறேனென்று..

அதிகாரமே...ஓயா திமிரே
உடல் பிதுங்க பணம் தின்னும்
ஒப்பற்ற வீண் பிறவிகளே...
எம் பணத்தில் எம்மை சுட்டு
எமக்கே இழப்பீடு தரும்
இணையற்ற இழி பிறவிகளே....
நச்சு காற்றில் நாசி நுழைத்து
நான்கு நாள் வாழும்...

மேலும்

எல்லை வரை போராடு மரணம் என்றால் கூட துணிவாய் நில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2018 5:28 pm
தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம் 26-May-2018 1:27 pm
காதலாரா - வெள்ளூர் ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2017 9:10 am

கண்களில் என்ன இருக்கிறது என்கிறாய் ...
கண்களில் தான் எல்லாம் இருக்கிறது என்கிறேன்...

**

அல்லி மலர் போல
குவளை மலர் போல
குளிர்ந்த கண்கள்..!

**
கோடையில் பிளந்த நிலம் போல
துரோகம் வெடிக்க
வெதும்பிக் கிடக்கும் கண்கள்..!

**
பாலையில் அலையும் வெய்யில் போல
பழி உணர்ச்சி கொண்டலையும் கண்கள்..!

**
இரு பாவ மூட்டையைப் போல
துரோகத்தை தூக்கி சுமக்கும் கண்கள்..!

**
பசியில் புரட்டும் வயிற்றுக்கு வேண்டி
மானம் பாராது யாசித்து கிடக்கும்
பூஞ்சை கண்கள்..!

**

விசேஷ வீட்டு மாவிலை தோரணம் போன்று
எப்போதும் அலங்கரித்துக் கொ

மேலும்

கண்களின் வகைமைகள் இத்தனையா என நினைக்க வைத்தது.. முடிவு அழகு.. 04-Aug-2017 8:14 pm
காதலாரா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2017 8:05 pm

நெனப்போட நிப்பவ...
~~~~~~~~~~~~~~~

ஒழக்க புடிச்சி
நெல்ல பிரிச்சவ..
கணக்கா வடிச்சி
புள்ள வளத்தவ...

புளி நசுக்கி..
பொடவ வாங்கி
பேத்திக்குப் போத்தி
ஒறவக் காத்தவ...

வெத்தலத் துப்பிய
வேக்காட்டு தடத்துல..
கதையாக் கொட்டும்
தொணையா நடந்தவ...

கரும்பு சோக
குடுசைக்கு தோக..
நிலா வந்து போக
கூர குட்டி வானமாக..

உடும்பு சிரிப்பு
காத்தோட கலக்க...
அடுப்பு நெருப்பும்
சோத்தோட மணக்கும்..


நெத்தி சாம்பல
சொத்தா நெனச்சவள
பெத்த ஆம்பள எவனும்
செத்தும் விரும்புல...

- காதலாரா.

மேலும்

காதலாரா - காதலாரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2017 10:51 pm

கவிஜியின் நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நூல் விமர்சனம் - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஒரு பறவை தன் சிறகில் வண்ணமிட்டு .. அது ஒட்டு மொத்த வானைத் தொட்டு..தீரா தாகத்தில் பால்வெளியை முட்டி மோதி..மானுடம் பேசும் கவி ஊசிகளை கடவுளின் கரத்தில் ஆழ புகுத்த சாத்தான் சாயலும் சரியெனும் வரிகளை ..வாசகன் வெறுமனே கடக்கவோ மறக்கவோ முடியாது ...அத்தனை அழுத்தம் ..நூலெங்கும்

அட்டைப்பக்கம் முதல் அத்தனை பக்கத்திலும் தன்னை ஒரு பறவையாகவே உருமாற்றி ..சித்திர பறவையின் சீரிய கோணத்தை கவி கருவில் ஊற்றி ..வரி முழுக்க தேன் நதி கடக்

மேலும்

காதலாரா - காதலாரா அளித்த நூலை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2017 4:51 pm

ஒரு பறவை தன் சிறகில் வண்ணமிட்டு .. அது ஒட்டு மொத்த வானைத் தொட்டு..தீரா தாகத்தில் பால்வெளியை முட்டி மோதி..மானுடம் பேசும் கவி ஊசிகளை கடவுளின் கரத்தில் ஆழ புகுத்த சாத்தான் சாயலும் சரியெனும் வரிகளை ..வாசகன் வெறுமனே கடக்கவோ மறக்கவோ முடியாது ...அத்தனை அழுத்தம் ..நூலெங்கும்

அட்டைப்பக்கம் முதல் அத்தனை பக்கத்திலும் தன்னை ஒரு பறவையாகவே உருமாற்றி ..சித்திர பறவையின் சீரிய கோணத்தை கவி கருவில் ஊற்றி ..வரி முழுக்க தேன் நதி கடக்கும் கரைகளை ...மணலோடும் நிலவோடும் ரசிகனுக்கு விட்டு செல்லும் கவிஞரின் தேசம் வெறும் நிழல் தேசமட்டுல்ல ...அது பெரும் நிற தேசம் .

என்னுரையில் எழுமிந்த பறவை ..கனவு ..நிஜம் ..கற்பு ..

மேலும்

அருமையான நூல் 15-Sep-2017 6:26 pm
காதலாரா - மலர்91 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2017 1:30 pm

  சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா? 
@@@@@@@@@@@@@@@@@@@@ 
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்     விளக்குகிறார்: 

“இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர்களாவது, கள்ளர் 

வகுப்பினர் முதலானோர்பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயருகளாவது சங்கநாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் 

இடைக் காலத்துத் தோன்றியவையே. 

ஐயர் எனபது முனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது.கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறுகுலத்துப் 

பெரியார்களையும் சிறப்புப்பற்றி ஐயர் என ஆன்றோர் வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும், 

சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் 


என்ற விதிப்படி, அமரமுனிவன் அகத்தியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றாற்போல இயற்பெயர்க்கு 

முன் வருதலே மரபு. பிற்காலத்திற்றான் பெயர்கள் இம்முறைமாறி வரலாயின. சிறப்புப்பெயரும் முன்பு யாவர்க்கும் வழங்குவன 

அல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் விரும்பவில்லையென்பது போதரும்” 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
(நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்- 18, தமிழ்மண், சென்னை, பக்கம் 43, 44.) 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
நன்றி: முகநூலில் - தமிழ நம்பி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சீரிளமை குன்றாஎம்மொழி செம்மொழிஉலகின் முதன் மொழி

மேலும்

தொடருங்கள் தோழமையே ,வாழ்த்துக்கள் 12-Jan-2017 12:12 pm
நன்றி கவிஞரே. இந்த அறிஞரை நான். பள்ளிப் பருவத்திலேயே கேள் வி ப் பட் டி ரு க் கி றே ன். க ல்லூரியில் இவரது கட்டு ரைய மொழிப் பாடத்தில் படித்திருக்கிறேன். படிப்பை முடித்து பணியி ல் சேர்ந் த பின்பு க ள் ள க் கு றி ச் சி யி ல் இரு க் கு எ ன் அக் கா வீ ட் டு க் கு செ ன் று சில நா ட் க ள். தங் கி யி ரு ந் த போ து தா ன் த மி ழர் களில் நா ட் டா ர். என் ற. பி ரி வி ன ரு ம். உ ள் ள னர். எ ன் ப தை அ றி ந் தே ன். ஒரு. மு றை தே ர் த லி ல் நி ன் ற போ து கா ம ரா ச ரி ன் பெ யர் கா ம ராஜ நா டா ர் .எ ன் றே நா ளி தழ் களி ல். ப தி வு செ ய் தா ர் க ள். பி ன் ன ர் அவ ரு ம். நா டா ர் என் பதை த் த வி ர் த் தா ர். நீ ங் கள்சொ ல் வ து எ ன க் கு ப். பு ரி. தகி றது. எ னி னு ம். நா ட் டா ர். எ ன் ற பி ரி.வி.ன.ர் இ ரு க் கி றா ர் கள். 11-Jan-2017 4:54 pm
நாவலர் ந .மு. வேங்கடசாமி நாட்டார் தாமே தமிழ் படித்து உயர்ந்த தமிழ் பேரறிஞர் . நாட்டாரை ஏன் சாமியாராக்கியிருக்கிறீர்கள் ? நாட்டார் என்பது சாதியைக் குறிக்கும் பெயரோ என்ற ஐயம் ஏற்பட்டிருக்கலாம். இல்லை . நாடு --நாட்டைச் சேர்ந்தவர் நாட்டார். நம் மாநிலம் தமிழ் நாடு . நாம் தமிழ் நாட்டார்கள். அன் விகுதி மாற்றி அர் அல்லது ஆர் விகுதி வர அமைப்பது தமிழில் மரியாதை பண்பாடு. அதனால்தான் சாமி சாமியாரானார் . கவிஞன் கவிஞரானார் , தமிழன் தமிழரானார். மலர் மலராரானார் . சாரலன் சாரலரரானார் ஆகலாம். நாவலர் தம் பெரும் புலமையால் சாதீய பெயர்களுக்கு சிறப்பு விளக்கம் தந்திருக்கிறார் . போற்றலாம். சரிதானே மலராரே ? அன்புடன், கவின் சாரலன் 11-Jan-2017 9:17 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Jan-2017 1:19 pm

நீ வைத்த
கருவாட்டுக் குழம்பில்
காதல் வாசம்.......!


**

உன் ரயிலில்
நான் சக பயணி.
என் ரயிலில்
நீயே பயணி..!


**

அதிகாலை கூந்தல் முடிச்சில்
சிக்கிக்கொண்ட என் மீசையை முறுக்கும்
அவளோடு நான் காதல் வசம்.
அது அவ்வளவும் மோக வாசம்.

**

பசிப்பது போல
வலிக்கிறது உன் நினைவு.

**

எனக்கான வாழ்க்கையில்
திரைக்கதையை நீ எழுதாதே..!
உனக்கான கதையை
நான் எழுதமாட்டேன்...!

**

என் நூலகத்தில்
நீ வாசிக்கப்பட்ட புத்தகம்.

**
என் தலையெழுத்து
ஓர் அந்தரங்க கவிதை

**

ஒரு தனியறை
ஒரு மேஜை
ஒரு பேனா
ஒரு நாள்
ஒரு நான்
ஒரு கவிதை
ஒரு வாக்குமூலம்
ஒரு மரணம்

***

உன் இதழ்

மேலும்

நல்ல வரிகள் வாழ்த்துக்கள் 10-Feb-2017 6:37 am
அருமையான வரிகள் ... வாழ்த்துக்கள் 25-Jan-2017 11:41 am
நன்றி தோழா 05-Jan-2017 5:06 pm
அடடா..... நன்றி தோழா 05-Jan-2017 5:06 pm
காதலாரா - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2016 9:32 pm

குகை ஒலி
~~~~~~~~

மகுடம் மாற்றும் மந்திர
ஒலியலை ஓடும் குகையை
கால் தடம் கடக்கும் கணத்தில்
பாதை நகரா மாயை..
உள்ளே ஒருத்தி உடல்
உறக்கம் துறந்த நடுக்கத்தில்
குகை விரிசல் எண்ணி
பகையின் விழிக்குள் சிக்கி
ஆயுள் எரிய கதறி பின்
நாணமிழந்து உலர்ந்தது..

துறவுச் சென்ற வனத்தை
இரவு வான் துரத்த
அயர்ந்துக் கிடந்த எனக்கு
காற்றில் வந்த கதறல்
கருவின் ஆழமடைக்க...
வெகுண்டெழுந்து விரைய
காட்டுப் பாதை மர்மம்
மாறா நிற ஓவியத்தில்
சுழன்றுக் கொண்டே நின்றது..

ஒலிக் கிழித்த குகை முன்
ஒளி உமிழும் கையோடு
ஆறு வினாடி அசையாத
எனக்கு ..
எந்த ஈர்ப்புமில்லையென
குகைக்குள் நுழைந்து
தேட தேட ...

மேலும்

வழக்கம் போல் நலம் கொஞ்சம் இறக்கம் தான். 01-Dec-2016 10:32 pm
ஆம் ஐயா ..கொஞ்சம் பணிச்சுமை தான் ... சிந்திப்போம் ....அன்பில் மிகவும் மகிழ்ச்சி ஐயா. நீங்களும் நலம் என நம்புகிறேன் 01-Dec-2016 11:03 am
காதலாரா எங்கு சென்றீர்? பணிச்சுமையா? 21-Nov-2016 12:57 pm
காதலாரா - லாவண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2016 10:28 pm

நிலவின் விழியில்
இரவோடு நித்தம்
இதழ் தழுவும் முத்தமடி...
விடியா இரவில் விழித்து எழடி
என் ஆயுள் முடிவில்...!

~லாவண்யா

மேலும்

நன்றி தோழரே ... 16-Oct-2016 10:39 pm
விழித்து எழும் சுழல் நிழல் யாவும் அழகு ... 15-Oct-2016 11:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (395)

ஆதவன்

ஆதவன்

கன்னியாகுமரி
எஸ் ஹஸீனா பேகம்

எஸ் ஹஸீனா பேகம்

செங்கோட்டை, தமிழ்நாடு.
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (396)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (397)

user photo

svshanmu

சென்னை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே