அ வேளாங்கண்ணி - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : அ வேளாங்கண்ணி |
இடம் | : சோளிங்கர், தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 25-May-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 39472 |
புள்ளி | : 7114 |
நான் நல்ல நண்பன்...
இருபது வருடங்கள் நாட்டுப்பணி முடித்து, தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (மேல்பட்டி, வேலூர் மாவட்டம்) பணிபுரிந்து கொண்டுள்ளேன்....
திரு.அகன் ஐயா தொகுப்பாசிரியராக இருந்த "தொலைந்து போன வானவில்" எனும் நூலில் எனது கவிதை ஒன்று இடம்பெற்றுள்ளது....
மற்றும் தோழர்கள் கவிஜி மற்றும் தாகு என்னும் கனா காண்பவன் அவர்கள் தொகுத்தளித்த "மழையும் மழலையும்" எனும் நூலில் எனது இரண்டு கவிதைகள் இடம்பெற்றுள்ளன...
நிலாமுற்றம் என்ற முகநூல் குழுமம் வெளியிட்ட "சொல்லழகு" என்ற முதலாம் ஆண்டுவிழா கவிதைத் தொகுப்பு 2016 நூலில் எனது கவிதை "சந்திப்பு" இடம்பெற்றுள்ளது...
தமிழக எழுத்தாளர் குழும இரண்டாம் ஆண்டு விழாவில் (12.02.2017) வெளியிடப்பட்ட "தமிழக ஜோக்ஸ் பிரபலங்கள் (ஜோக்ஸ்)" எனும் திரு.திருமயம் பெ.பாண்டியன் மற்றும் திரு.வைகை ஆறுமுகம் ஆகியோரால் தொகுக்கப்பட்ட நூலில் எனது ஆறு நகைச்சுவைகள் இடம்பெற்றுள்ளது.
முக நூல் குழுமம் "கவியுலகப்பூஞ்சோலை"யின் ஆண்டுவிழாவான 01.05.2017 அன்று குழுமத்தின் வெளியீடான "ஆண்டு விழா மலரில்" எனது பாடல் ஒன்றும், மற்றொரு நூலான "மாற்றான் தோட்டத்து மல்லிகை"யில் எனது படைப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
30 ஆகஸ்டு 2017ல் முக நூல் குழுமம் படைப்பின் ஆண்டுவிழாவில் வெளியிடப்பட்ட ஆண்டு விழா மலரான "மௌனம் திறக்கும் கதவு" நூலில் ஒரு படைப்பும் மற்றும் படைப்பு குழும போட்டியின் தொகுப்பு நூலான "நதிக்கரை ஞாபகங்கள்" இதழில் ஒரு படைப்பும் இடம் பெற்றுள்ளன.
இதுவரை மூன்று கவியரங்கத்தில் கவிதை வாசித்துள்ளேன்.
இதுவரை "கல்கி" இதழில் ஒரு கவிதையும், ஒரு நொடிக் கதையும், "இனிய உதயம்" இதழில் மூன்று கவிதைகளும், "வாரமலர்" இதழில் பத்து குறுங்கவிதைகளும், ஒரு கவிதையும், இரண்டு சிறுகதைகளும், "அத்திப்பூ" இதழில் பதினான்கு கவிதைகளும், ஆறு சிறுகதைகளும், ஒரு நகைச்சுவையும்,"குங்குமம்" இதழில் இரண்டு கவிதைகளும், "ஆனந்தவிகடன்" இதழில் ஐந்து நகைச்சுவைகளும், "ராணி" இதழில் ஒரு நகைச்சுவையும், "குமுதம்" இதழில் நான்கு நகைச்சுவைகளும், "கல்கண்டு" இதழில் ஒரு நகைச்சுவையும், "பாக்யா" இதழில் எழுபத்தி ஏழு நகைச்சுவைகளும், ஒரு சிறுகதையும், ஏழு கவிதைகளும், "தினமலர் பெண்கள் மலரில்" ஒரு கவிதையும், இரண்டு நகைச்சுவையும், "தங்க மங்கை" இதழில் ஒரு கவிதையும், ஏழு நகைச்சுவைகளும், "ஜன்னல்" இதழில் இரண்டு கவிதைகளும், "தேவியின் கண்மணி" இதழில் ஒன்பது நகைச்சுவைகளும், "காமதேனு" இதழில் ஒரு கவிதையும், "பொதிகை மின்னல்" இதழில் இருபத்து இரண்டு குறுங்கவிதைகளும், ஐந்து நகைச்சுவைகளும், "இலக்கியச்சோலை" இதழில் ஒரு கவிதை, ஒரு வெண்பா, இரண்டு ஹைக்கூவும், "மின்னல் தமிழ்ப்பணி" இலக்கிய மாத இதழில் முப்பத்து ஆறு குறுங்கவிதைகளும், "பொதிகைச்சாரல்" இதழில் இரண்டு கவிதைகளும், "அச்சாரம்" இதழில் பதினைந்து கவிதைகளும், நான்கு நகைச்சுவைகளும், ஒரு சிறுகதையும், பதினான்கு எக்ஸ்பிரஸ் கதைகளும், "பாவையர் மலர்" இதழில் மூன்று சிறுகதைகளும், "படைப்பாளர்கள் குரல்" இதழில் ஒரு கவிதையும், "மாலைமதி" இதழில் பதினொரு கவிதைகளும், "வண்ணக்கதிர்" இதழில் ஒரு கவிதையும், "மக்கள் குரல்" நாளிதழில் ஒரு கவிதையும், மூன்று சிறுகதைகளும், "கொலுசு" மின்னிதழில் குறுங்கதை, குறுங்கவிதை மற்றும் சிறுகதைகளும், "சிறுவர்மலர்" இதழில் மூன்று சிறுவர் பாடல்களும், "சென்னை சிறுவர்மலர்" இதழில் ஒரு மொக்க ஜோக்கும், "சென்னை வாரமலர்" இதழில் ஒரு அர்ச்சனையும், "கோகுலம்" இதழில் மூன்று சிறுவர் பாடல்களும், "தினமணி" கவிதைமணியில் பல கவிதைகளும், "தி இந்து" தமிழ் தினசரியில் நாற்பத்தி ஏழு 'பஞ்ச்'களும், மூன்று கார்டூனும், மூன்று இகார்டூனும், அதன் சிறுவருக்கான இணைப்பான "மாயா பஜாரில்" ஒரு சிறுவர் கதையும் பிரசுரம் ஆகியுள்ளன..
(updated ஒன 20.01.2019 19.57)
======================================================================
https://www.facebook.com/velanganni77
======================================================================
https://m.facebook.com/groups/1695984020630329?view=permalink&id=1958171591078236
===========================================
எனது முதல் கவி அனுபவம்....
============================
1991... பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வேளை... எப்படியாவது கவிதை எழுதிவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தேன்.... வீட்டில் மாத, வார பத்திரிக்கைகள் பெரும்பாலும் வாங்கும் பழக்கம் இருந்ததால்... எங்கேனும் யாரேனும் கவிதை எழுதுவதைப் பற்றி எழுதியிருந்தால் உடனே படித்துவிடுவேன்.... ஆனால் எவ்வளவும் முயன்றும் ஒன்றும் எழுத வரவில்லை... எப்போதும் வானொலி கேட்கும் பழக்கமும் இருந்ததால்.. அதிலும் கவிதையைப் பற்றி ஏதேனும் ஒலிபரப்பினால் தவறாமல் கேட்டுவிடுவேன்.... இந்த வேளையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓய்வு பெரும் நாள் வந்தது... அவருக்காக ஒரு பிரிவுரைக் கவிதை என்னை எழுதச் சொல்லி எங்கள் தமிழ் ஆசிரியை சொன்னார்கள்... ஆழ்ந்து யோசித்து நான் எழுதிக் கொடுத்த வரிகளை சிறிது திருத்தம் செய்து என்னை பள்ளியின் மேடையில் காலையில் வாசிக்கச் சொன்னார்கள்... அவ்வாறு ஆரம்பமாகியது... பின் பள்ளியில் ஒரு கவிதைப்போட்டி நடந்தது... அதில் மயில் எனும் தலைப்பில் நான் எழுதிய படைப்பு இரண்டாம் பரிசு பெற்றது... அதனை படித்த ஒரு ஆசிரியர் மிகவும் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தார்... அதுவரை நான் மயிலைப் பார்த்தது இல்லை.... பத்தாம் வகுப்பு விடுமுறையில் இயற்கையைப் பற்றி, விலங்குகளைப் பற்றி, கடவுளைப்பற்றி மிக அதிகமாக எழுதினேன்... அவை இன்றும் உண்டு பத்திரமாக...
சொந்தங்களின் குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதையாகவே எழுதி அனுப்புவேன் கடிதம் மூலமாக...
என் அண்ணன் ஒருவரின் திருமணத்தில் நான் கலந்து கொள்ள முடியாத சூழ் நிலையில் ஒரு திருமண வாழ்த்து மடம் எழுதி அனுப்பினேன்... அதனை எனது அப்பா மற்றும் சொந்தங்கள் ஒரு பத்திரிக்கையாக அடித்து அங்கு வந்த அனைவருக்கும் கொடுத்திருக்கின்றனர்... பின்பு நான் ஊருக்குச் சென்ற பொழுது நீ வராவிட்டாலும் உன் கவிதையை எல்லோரும் படித்துச் சென்றது நீ அங்கு வந்தது போலவே இருந்தது என்று சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...
அந்த கவிதைப்பயணம் இன்று எழுத்துத்தளத்தின் மூலமாகவும், முகப்புத்தகத்தின் படைப்பு, ஒரு கவிஞனின் கனவு, நிலாமுற்றம், தமிழ்பட்டறை, கவியுலகப் பூஞ்சோலை மற்றும் செய்யுட்கலை சூடிகை ஆகிய குழுமங்களின் மூலமாகவும் தொடர்ந்து கொண்டுள்ளது.. மேலும் அனைத்து இதழ்களுக்கும் தினமும் கவிதைகளை அனுப்பிக் கொண்டுள்ளேன்... என்றாவது என் எழுத்துக்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...
*************************************************************
#தூண்டிலில்_சிக்காத_மீன்கள்
***** ***** ***** ***** ***** *****
சாதிக்க நினைப்போரை மலையும் தடுத்திடாது
தாண்ட நினைத்தோரை கல்லும் தடுக்கிடாது
போதிக்க ஊரிலே பெரியோர்கள் பலருண்டு
வீணாக இருந்தோமெனில் காணாமல் போயிடுவோம்
முதலடி வைத்ததுமே முள்ளும் குத்திடலாம்
வலிக்குதென நினைத்தோமெனில் வரும்வெற்றி மாறிடலாம்
முள்ளை மிதித்துநின்று வலியைப் பொறுத்தோமெனில்
முள்ளும் மலராகும் வான்மேகம் மலர்தூவும்
புயலது அடிக்குமெனில் இலைகள் உதிர்ந்திடலாம்
கடலது கோபம்கொள்ள கரைகள் அழுதிடலாம்
எரிமலை பொங்கிடவே தரையெல்லாம் கருகிடலாம்
லட்சிய வெறிகொண்டால் எதையும் எதிர்த்திடலாம்
முயற்சி செய்வதற்கான முயற்சியை எடுத்துவிட்டால்
அயர்ச்சி ஓடிவிடும் நம்பிக்கைவிதை மரமாகும்
பயிற்சி செய்துவந்து பந்தயத்தில் கலந்துகொள்ள
தளர்ச்சி தளர்ந்தோடும் கிளர்ச்சி மனம்கொள்ளும்
புழுவினைக் கட்டித்தூண்டில் மீனினைப் பிடிப்பதுபோல்
மயக்கும் காரணிகள் சுற்றிலும் பயமுறுத்தும்
எழுச்சியே கொள்கையென்று நினைக்கும் இதயத்திற்கு
தடைக்கல்லும் படிக்கல்லாகும் நாளையே விடியலாகும்
------------------------------------------------------------------------------------
பள்ளிக்கு இப்போது தான் செல்லத்துவங்கியிருக்கிறாள்...
படிக்கும் வகுப்பை மாற்றிக்கூறினால்
ரோஷம் பொத்துக்கொண்டு வரும்...
அதற்காகவே அடிக்கடி மாற்றிக்கூறுவேன்...
சின்னப்பூக்கள் கோபம் கொண்டால் அழகாகத்தான் இருக்கும்...
குறை கூறும் யாரையும் பிடிக்காது...
உடனே அவள் சொல்லும் முதல்வார்த்தை...
"இனிமே உங்ககிட்ட பேசவே மாட்டேன் போ..."
கொஞ்சும் வரைக்கும் அவள் உள்ளத்தில் ராஜாவாய் இருப்பேன்...
எதற்கேனும் மிரட்ட நேர்ந்தால்
அப்போதே கூஜாவாகி விடுவேன்...
"ரொம்ப மோசமான அப்பா" என பட்டப்பெயர் வைத்து விடுவாள்...
அடிக்கொருதரம் அவளது விருப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும்...
இப்பொழுதுதான் அழுதது போலிருக்
சுற்றிடும் நினைவுகள் உள்ளத்தில் உறைந்திடும்
உறங்கிடும் பொழுதினில் உலவிடும் பற்றிடும்
உறக்கத்தின் கழுத்தினை இரவெல்லாம் எழுந்ததும்
மறந்திடும் நிறமில்லா கனவு
பத்து வரிக்குள் நண்பனின் பெருமை
அடக்கிடத் தான் முடியுமா?
மொத்த மொழியின் வார்த்தைகள் எடுத்தாலும்
நண்பனின் அன்புக்கு போதுமா?
எதற்கு அழைத்தாலும் ஓடி வருவான்
கேள்விகள் அவனிடம் இல்லை
நமக்கு சிரிப்புக்காட்டி நமக்கென்று கண்ணீர்சிந்தி
மனதில் எவரெஸ்டாய் அவனிருப்பான்
அவன் நம் கூடவேஇருக்கும் கடவுள்
இதையே அவனும் கூறுவான்..
சரியான தருணங்களில் சரியாக பயன்படுத்த
சரிகின்ற வாழ்வை சரியாக்கும் மௌனம்
புரியாமல் சிலபேர் குதிக்கின்ற போது
புரியவே வைத்திடும் பேசாத மௌனம்
பெருமழையும் புயலும் இடிக்கின்ற இடியும்
அருந்தமிழ் கவிஞருக்கு கவிகொடுக்கும் மௌனம்
விருந்தினர்கள் உவகை மழலைகளின் ஆட்டம்
மாற்றமேனும் தந்திடாது நோய்முதியோர் மௌனம்
பேரிரைச்சல் கொடுக்கும் மனஅமைதி கெடுக்கும்
கடிதத்தின் அடுத்தநாள் காதலியின் மௌனம்
கோபத்தை அள்ளித்தரும் திட்டும்படி சொல்லித்தரும்
ஆசிரியர் கேள்விக்கு மாணாக்கர் மௌனம்
பேருவகை அளிக்கும் பேரின்பம் தெளிக்கும்
தூக்கத்தில் சிரிக்கின்ற பிறந்தசிசு மௌனம்
காரிருளின் தருணம் காட்டுவழிப் பயணம்
பெரு
"மரங்கள் பேசினால்.."
மரங்கள் பேச மனிதன் தாங்கான்
அவமதிப்பு கொடுத்தவன் காதில் வாங்கான்
வீச்சரிவாளாய் பேச்சிருக்கும்
கூர்மைகுத்தி இதயம் கிழிக்கும்
நல்வாழ்வு தந்ததால் தன்வாழ்வு தாழ்ந்த
ரணப்பட்ட கதைசொல்லி கண்ணீர்வடிக்கும்
நல்லது மட்டுமே செய்யும் தனக்கு
கெட்டது மட்டுமே செய்யும் மனிதாவென
கத்திக்கூச்சலிட்டு மனிதனை தலைகுனியவைக்கும்
மரத்திற்கு மட்டும் சட்டம் தெரிந்தால்
வெட்டிய ஒதுக்கிய மறந்த மதிக்காத
ஒவ்வொரு மனிதனையும் நீதிக்கூண்டில் நிற்கவைக்கும்
ஆயுளுக்கும் வெளியே வரமுடியாதபடி
உள்ளே தள்ளும் மரத்தின் சட்டமே வெல்லும்
மரமாய் பிறந்திருந்தும் உயிராய் இருந்தேன்
நீயோ உயிரோடிருந்த
"அன்பிற்கும் உண்டோ"
செலவு செய்யவெனவே
சம்பாதிக்கப்படும் பணம்
சேமிப்பின் உண்டியலுக்கும்
சில நாள் சென்று வரும்..
அந்த இடைவெளியில்
தேவைப்பட்டதாய் தோன்றிய அனைத்தும்
தேவைப்படாததாய் போயிருக்கும் அம்மாவிற்கு..
மாற்ற வேண்டிய கிழிந்த சட்டை
வேறு வண்ணத்தை இடையில்
ஜோடி சேர்த்திருக்கும் அப்பாவிற்கு..
உடைந்த சைக்கிள் அப்படியே கிடக்க
நடராஜா பயணம் பழகிப்போயிருக்கும் அண்ணாவிற்கு..
வெகு நாளாய் அக்கா அடம்பிடித்துக் கேட்ட
இருநூறு ரூபாய் சேலை கூட
மனதை விட்டு போயிருக்கும் அக்காவிற்கு..
ஆனால் மறக்காமல் செண்பகக்குட்டிக்கு மட்டும்
டெடி பியர் பொம்மையாய் மாறியிருக்கும்
அன்புக் குடும்பத்தின
"இழப்பின் வலி"
தளர்ந்திருந்தது தேகம்..
ஓடி மறைந்திருந்த இருபத்தாறு வருடமும்
ஒரு நொடியாய் அவன் கண்ணுக்குள் வந்து போனது..
ஒரு சொல் வீட்டில் யாரோ சொல்ல
அதனை பொறுக்க முடியாமல் ஓடியவன் தான்.
ராணுவத்தில் இருபத்தாறு ஆண்டு பணியாற்றிவிட்டு
ஒற்றை சூட்கேஸுடனும்
உடம்பு வாங்கிய இரண்டு குண்டடித் தழும்புகளுடனும்
ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான்..
பத்து வருடங்களுக்கு முன்னே
அந்த ஊரில் ஏற்பட்ட கலவரத்தால்
ஊரே காலியாகி எங்கெங்கோ சென்று விட்டார்கள்
என்பதை அறிந்தவன் தான்..
அவன் வருவானென ஆரத்தி எடுக்க காத்திருந்தது
அவன் வைத்து இன்று மொட்டையாக நிற்குமந்த ஒற்றை மரம்..
அங்கு அவனது பால்யம்
த
மனிதன் போகும் போக்கு
=======================
ஈகை குணம் மறந்தோம்
இகழுதல் சேர்த்துக் கொண்டோம்
வாழை செயல் மறந்தோம்
வாழ்வெலாம் கஞ்சன் ஆனோம்
கண்முன்னே வறியர் கண்டும்
கண்மூடி நடித்து நிற்போம்
காசுபணம் கேட்போர் முன்னே
காதுகேளார் போல் நடப்போம்
அறச்செயல்கள் அறவே விட்டோம்
அகம்பாவம் கட்டிக் கொண்டோம்
புறமுதுகிட்டு ஓடும் செயலை
உதவி கேட்போரிடம் கடைபிடித்தோம்
மனிதநேயம் மறந்து போனோம்
மிருகம்போலே முழுதாய் ஆனோம்
நேர்மையாக இருக்கும் சிலரால்
மழையும் பெய்ய பிழைத்துக்கொண்டோம்
இம்மியளவும் இனியவை இல்லை
சிரிக்கக்கூட காசு கேட்போம்
நல்லது செய்யும் சிலரைக்கூட
கேலியாய் பார்க்க கற்றுக்கொண்டோ
காதல் மாத கவிதைகள்
¶¶
எதைச் சொன்னாலும்சிரித்து வைக்கிறாய்..
அதெல்லாம் சரி
நான் காதலைச் சொன்னதும் கூட
சிரித்து வைத்தாயே..
அன்றிலிருந்து தான்
எனக்கு நானே சிரித்துக் கொண்டிருக்கிறேன்..
¶¶
அலையோடு விளையாடினாய்.. ரசித்தேன்
மழையோடு விளையாடினாய்.. மகிழ்ந்தேன்
காற்றோடு விளையாடினாய்.. குளிர்ந்தேன்
நிலவோடு விளையாடினாய்.. மலைத்தேன்
இப்போது காதலோடு விளையாடிவிட்டாயா?
அழுவதைத்தவிர நான் வேறென்ன செய்ய?
¶¶
நானோ காதலைச் சொல்லி பல நாளாச்சு
நீயோ ஆமாவும் சொல்லவில்லை
இல்லையும் சொல்லவில்லை
இப்படி ஆறப்போட்டுவிட்டாயே!
தவிக்குமென்னை மறைமுகமாக ரசிக்கிறாயா!
இல்லை வேறோர் இதயத்தில் வசிக்கிறாயா!
ஏதாக
செவப்பி
==========
அத்தியாயம் 1
===============
"வாங்க.. வாங்க.. வணக்கம்..."
"உங்க முகத்துல சில்லுனு காத்து படுதா.. அப்படியே ஒரு பச்ச மண்ணு வாசம் உங்க மூக்கு தொலைக்குதா.. அப்ப நீங்க பொய்கை ஆற்றங்கரையோரம் நிக்கறீங்கன்னு அர்த்தம்.."
"சுத்திமுத்தியும் பாருங்க.."
"எவ்வளவு மரம்...! எவ்வளவு வனம்...! எவ்வளவு பறவைங்க...! எப்படி சிரிச்சுகிட்டு கெடக்கு பாருங்க இந்த பூமி..!"
"அட.. அந்த வானத்தைப் பாருங்க.. எவ்வளவு பொலிவா இருக்குனு"
"அடடே! என்ன இது சத்தம்? கொய்யா முய்யா கொய்யா முய்யானு.."
"ஓ அப்படியே சேதி கேட்டுட்டே... பத்மாவதியம்மா வீட்டுக்கு வந்துட்டோமா..!"
உனக்கெதற்கு வேண்டாத வேளை!?
தினம் தினம்
புதுப்புது கவிஞர்களை பிறக்க வைக்கிறாய்..
வேண்டாமடி வேண்டாம்..
ஒழுங்காய் வீட்டுக்குள்ளேயே இரு..
இருக்கும் கவிஞர்கள் போதும்..!
அலை அடித்துக் கொண்டிருக்கிறது
பயம் அலைந்து கொண்டிருக்கிறது
நிலை குலைந்து கொண்டிருக்கிறது
நிஜம் வருத்திக் கொண்டிருக்கிறது
உயிர் பறந்து கொண்டிருக்கிறது
உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது
மூச்சு விழித்துக் கொண்டிருக்கிறது
பேச்சு நடுங்கிக் கொண்டிருக்கிறது
அன்பு கலங்கிக் கொண்டிருக்கிறது
உறவு ஆடிக் கொண்டிருக்கிறது
ஆரோக்கியம் திரும்பவரும் நாள்பார்த்து
ஜனமே தவமிருந்து கொண்டிருக்கிறது