sarabass - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  sarabass
இடம்:  trichy
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Feb-2013
பார்த்தவர்கள்:  3704
புள்ளி:  3693

என்னைப் பற்றி...

கவிஞர் ,கல்லூரிப் பேராசிரியர் மற்றும் பள்ளி முதல்வராகப் பணியாற்றியவர் .திருச்சியைச் சேர்ந்தவர் .கவிதை என் உயிர். எதைப் பார்த்தாலும் மனதில் நிலைநிறுத்தி கவிதை எழுதுவது எனது பொழுதுபோக்கு .இயற்கையின் காதலி நான் .படிப்பு ம். MSC .M PHIL (CHEMISTRY ),M .ED M .PHIL (EDUCATION ),P .G DGC

என் படைப்புகள்
sarabass செய்திகள்
sarabass - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2021 12:13 am

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இலந்தை இராமசாமி ஐயா அவர்களே .


மரபின் மகுடமாய் மண்ணுலகில் வாழும்
உரமான வேந்தரை ஊன்று .

அகவையோ கூட அருந்தமிழ் கூடும்
முகப்பொலிவும் சான்றாகும் முன் .

முத்தான தாய்மொழிக்கு முத்திரைத் தந்தவராம்
சொத்தாம் உலகின் சுகம் .

இனிய பிறந்தநாள் இன்பங்கள் சேரும்
கனிபோல் சுவைக்கும் கனிந்து .

வளமும் நலமும் வரவேற்கும் நாளும்
உளமார வாழ்த்த உவப்பு .


என்றும் அன்புடன்
சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

sarabass - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2020 7:37 pm

வாலிபக் கவிஞர் வாலி

வாலிபர்கள் நெஞ்சத்தில் வாலிக்கோ இடமுண்டு .
காலியாய் இருப்போரும் காதலில் விழுந்திடுவர் .
வேலியில்லாப் பயிர்போல வேகமுடன் பற்றிடுவர் .
காலில்லாக் காளையர்க்கும் காலாகும் இவர்பாக்கள் .


மல்லிகையும் மயங்குகின்ற மன்மதனாய் கவிகளிலே
பல்சுவையும் கூட்டுகின்றப் பாசமிகு கவிஞரிவர் .
மாதவியும் மயிலாகி மண்ணுலகில் தோகைவிரிப்பாள் .
ஏகாந்தம் மிக்குடைய ஏற்றமிகும் எழுத்தாணி .


புன்னகை மன்னனை பூவிழிக் கண்ணனை
வண்ணமிகு பாட்டினிலே வகையுறவே வடித்தவராம் .
தென்றலிலே மிதந்துவரும் தெம்மாங்கு கீதங்கள்
காற்றுவாங்கப் போனாலோ காலமெல்லாம் இசைக்குமே .


ஆண்டுக்கு ஆண

மேலும்

sarabass - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2019 11:03 pm

குழந்தைகளா கூலிகளா கொடுமையான அவலநிலை .
மழலைகளின் நிலையிதுவா மரணிக்கும் மனிதநேயம் .
கழனிமேடு செப்பனிடும் காலத்தின் கொடுமையிது .
பழங்கதையும் இதுவல்ல

மேலும்

sarabass - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2018 7:05 pm

வெண்பா மேடை -- 100

தமிழ் சிறப்பெழுத்து வெண்பா

வாழ்த்திடுவோம் முத்தமிழை வாழ்க தமிழ்த்தாயும்
தாழ்ந்திடுமா நம்மொழியும் தாழாது - வாழ்ந்திடும்
காழ்ப்புணர்ச்சி சூழாக் கமழ்கின்ற பைந்தமிழ்
மூழ்காதச் சூழலில் மூழ்கு .

சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

தமிழ் என்பது தவம்; தமிழன் என்பது வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Aug-2018 11:48 am
sarabass - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2017 4:58 pm

கிராமிய கவிதைச் சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

வெள்ளாம வெளஞ்சிருக்கு கண்ணம்மா !
வெதச்ச நெல்லும் கதிராச்சு கண்ணம்மா !
வெந்த நெஞ்சும் மாறிடிச்சு கண்ணம்மா !
வெள்ளி மெட்டி வாங்கித்தாரேன் கண்ணம்மா !


தைமகளும் பொறந்திடுவா பொன்னம்மா !
தழைக்குமடி தரிசுகளும் பொன்னம்மா !
தரமான வெள நெலமும் பொன்னம்மா !
தந்திடுமே வெள்ளாம பொன்னம்மா !


நாத்துநட வாடிபுள்ள கண்ணம்மா !
நட்டு வெச்சா சோறுண்டு கண்ணம்மா !
நல்ல மழை பெய்யுமடி கண்ணம்மா !
நகரத்துக்குப் போவாதடி கண்ணம்மா !


கண்ணீரு வேணாமடி பொன்னம்மா !
தண்ணீரு வந்திடுமே பொன்

மேலும்

காவிரித் தாயை பகடையாடுகிறார்களே அரசியல் பாவிகள். 28-Mar-2018 12:01 am
மிக்க நன்றி 03-Jan-2017 11:48 am
மாட்டையும் தான் ஓட்டிக்கிட்டு மலையோரம் போயிக்கிட்டு கண்ணம்மா நம் கஞ்சிக்கே ஏர் உழுவோம் கண்ணம்மா சிறப்பான கிராமிய மணம் 02-Jan-2017 5:51 pm
sarabass - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2017 9:34 pm

தரையிலும் கண்ணீர் !
தண்ணீரிலும் கண்ணீர் !
கரையிலும் கண்ணீர் !
கனவிலும் கண்ணீர் !

கடலே எங்கள் வாழ்க்கை !
கரையிலே எங்கள் குடும்பம் !
படகிலே ஓட்டை விழுந்தால்
பரதவர் வயிறு நிரம்புமா ?

தண்ணீரில் நீந்தக் கற்றோம்!
தரைதனில் கண்ணீர் விட்டோம் !
பாரினில் வாழவழி இல்லை ;
பலநாள் மீன்களாய்த் துடித்தோம் !

மீனவர் சொத்து மீன்தான் !
மீனவர் சொந்தம் மழைதான் !
மீனவர் இல்லம் படகுதான் !
மீனவர் உலகம் கடல்தான் !

இலங்கை எல்லையிலே
இயல்பாய் செல்லும் மீனவன்
நடுக்கடலிலே சிக்கி
நல்வாழ்வாம் உயிரை இழக்கின்றான் ;



சுழன்றடிக்கும் சுறாவளியோ!
போர்த்தொடுக்கும் புயலோ
சிதற அடி

மேலும்

மிக்கநன்றி 02-Feb-2017 12:00 pm
மிக்க நன்றி 02-Feb-2017 12:00 pm
சிந்தனை நன்று, வாழ்த்துக்கள் - மு.ரா. 31-Jan-2017 11:43 pm
போற்றுதற்குரிய கவிதை வரிகள் வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 31-Jan-2017 10:32 pm
sarabass - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2017 8:40 pm

ஆண்மையது தவறினாலே
------ ஆண்மகனும் அழகில்லை .
ஆண்டவனால் தந்திட்ட
------- ஆளுமையை மாற்றாதீர் !


வேண்டுமெனில் கிட்டிடுமா !
------ வேதனைதான் மிஞ்சுமன்றோ !
மாண்புடையக் கற்புநெறி
------ மானிடர்க்குப் பொதுவன்றோ !!!


கள்வனாக வாழ்வதற்குக்
------- காளையர்கள் முற்பட்டால்
புள்ளிமான் போன்றதொரு
------- புவிமகளும் வரமாட்டாள் !


அள்ளியள்ளி அணைத்திடுங்கள்
------- அன்புடைய மனையாளை .
துள்ளுகின்ற மனத்தினிலே
------- தூய்மைநெறி சேரட்டும் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

ஒழுக்கம் இருபாலருக்கும் தேவை. 27-Mar-2018 11:58 pm
பாராட்டுக்கள் ஆன் பெண் மரபு கவிதை பெண்ணியம் மலரட்டும் ஆண் பெண் கற்பு இரு பாலாருக்கும் தேவை . 31-Mar-2017 3:40 pm
மிக்கநன்றி 02-Feb-2017 12:01 pm
படித்ததில் பிடித்த கவிதை 01-Feb-2017 1:13 pm
sarabass - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2018 1:12 pm

எங்கும் தமிழென்று முழங்கு

செந்தமிழ் வாழவே செப்பிடு மானிடா
பைந்தமிழ்ப் போற்றிப் பசுமையான கீதமே
தீந்தமிழ்ச் சொற்களால் தீண்டிட வேண்டுமாய்
தெள்ளுதமிழ்ப் பேசினால் தெம்பு .


வாழிய செந்தமிழ் வாழியவே எந்நாளும்
நாழிகை தோறுமாய் நம்முன்னே நிற்கவே
ஊழியம் செய்வோம் உவந்து மகிழவே
ஆழியாய் மாந்துக அன்பு .


நனிபல சீர்மிகு நற்றமிழ் கற்போம்
பனியென வந்திடும் பாவங்கள் நீங்க
தனித்தமிழ் வேண்டியே தாபிப்போம் நாளும்
இனியாவும் நன்மையே ஈங்கு .


சங்குகொண்டே ஓதுவோம் சந்ததி மேம்பட
பங்கிடவே உண்டோ பரவச செந்தமிழை
மங்காது வாழ்ந்திடுமாம் மாசற்றப் பைந்தமிழ்
தங்கிடுமே நாட்டில் தழைத்து .

மேலும்

அருமை நட்பே..... உங்கள் இலக்கிய பயணம் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.... 31-Jan-2018 10:47 pm
ஒருத்தனின் சிந்தனை மட்டும் தமிழுக்கு சிறப்பை சேர்க்காது. அது ஒட்டு மொத்த தமிழர்களின் நேசத்தில் வளர்க்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 8:37 pm
sarabass அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Jan-2017 8:40 pm

ஆண்மையது தவறினாலே
------ ஆண்மகனும் அழகில்லை .
ஆண்டவனால் தந்திட்ட
------- ஆளுமையை மாற்றாதீர் !


வேண்டுமெனில் கிட்டிடுமா !
------ வேதனைதான் மிஞ்சுமன்றோ !
மாண்புடையக் கற்புநெறி
------ மானிடர்க்குப் பொதுவன்றோ !!!


கள்வனாக வாழ்வதற்குக்
------- காளையர்கள் முற்பட்டால்
புள்ளிமான் போன்றதொரு
------- புவிமகளும் வரமாட்டாள் !


அள்ளியள்ளி அணைத்திடுங்கள்
------- அன்புடைய மனையாளை .
துள்ளுகின்ற மனத்தினிலே
------- தூய்மைநெறி சேரட்டும் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

ஒழுக்கம் இருபாலருக்கும் தேவை. 27-Mar-2018 11:58 pm
பாராட்டுக்கள் ஆன் பெண் மரபு கவிதை பெண்ணியம் மலரட்டும் ஆண் பெண் கற்பு இரு பாலாருக்கும் தேவை . 31-Mar-2017 3:40 pm
மிக்கநன்றி 02-Feb-2017 12:01 pm
படித்ததில் பிடித்த கவிதை 01-Feb-2017 1:13 pm
sarabass அளித்த படைப்பில் (public) muraiyer69 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Jan-2017 9:34 pm

தரையிலும் கண்ணீர் !
தண்ணீரிலும் கண்ணீர் !
கரையிலும் கண்ணீர் !
கனவிலும் கண்ணீர் !

கடலே எங்கள் வாழ்க்கை !
கரையிலே எங்கள் குடும்பம் !
படகிலே ஓட்டை விழுந்தால்
பரதவர் வயிறு நிரம்புமா ?

தண்ணீரில் நீந்தக் கற்றோம்!
தரைதனில் கண்ணீர் விட்டோம் !
பாரினில் வாழவழி இல்லை ;
பலநாள் மீன்களாய்த் துடித்தோம் !

மீனவர் சொத்து மீன்தான் !
மீனவர் சொந்தம் மழைதான் !
மீனவர் இல்லம் படகுதான் !
மீனவர் உலகம் கடல்தான் !

இலங்கை எல்லையிலே
இயல்பாய் செல்லும் மீனவன்
நடுக்கடலிலே சிக்கி
நல்வாழ்வாம் உயிரை இழக்கின்றான் ;



சுழன்றடிக்கும் சுறாவளியோ!
போர்த்தொடுக்கும் புயலோ
சிதற அடி

மேலும்

மிக்கநன்றி 02-Feb-2017 12:00 pm
மிக்க நன்றி 02-Feb-2017 12:00 pm
சிந்தனை நன்று, வாழ்த்துக்கள் - மு.ரா. 31-Jan-2017 11:43 pm
போற்றுதற்குரிய கவிதை வரிகள் வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 31-Jan-2017 10:32 pm
sarabass - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2017 4:58 pm

கிராமிய கவிதைச் சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

வெள்ளாம வெளஞ்சிருக்கு கண்ணம்மா !
வெதச்ச நெல்லும் கதிராச்சு கண்ணம்மா !
வெந்த நெஞ்சும் மாறிடிச்சு கண்ணம்மா !
வெள்ளி மெட்டி வாங்கித்தாரேன் கண்ணம்மா !


தைமகளும் பொறந்திடுவா பொன்னம்மா !
தழைக்குமடி தரிசுகளும் பொன்னம்மா !
தரமான வெள நெலமும் பொன்னம்மா !
தந்திடுமே வெள்ளாம பொன்னம்மா !


நாத்துநட வாடிபுள்ள கண்ணம்மா !
நட்டு வெச்சா சோறுண்டு கண்ணம்மா !
நல்ல மழை பெய்யுமடி கண்ணம்மா !
நகரத்துக்குப் போவாதடி கண்ணம்மா !


கண்ணீரு வேணாமடி பொன்னம்மா !
தண்ணீரு வந்திடுமே பொன்

மேலும்

காவிரித் தாயை பகடையாடுகிறார்களே அரசியல் பாவிகள். 28-Mar-2018 12:01 am
மிக்க நன்றி 03-Jan-2017 11:48 am
மாட்டையும் தான் ஓட்டிக்கிட்டு மலையோரம் போயிக்கிட்டு கண்ணம்மா நம் கஞ்சிக்கே ஏர் உழுவோம் கண்ணம்மா சிறப்பான கிராமிய மணம் 02-Jan-2017 5:51 pm
sarabass அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Sep-2016 2:51 pm

காலைக் கதிரவனைக் கண்டலர்ந்த தாமரையும்
மாலைச் சுடரால் மயங்குவதேன் ? - பாலையிலும்
சோலைப் பனித்துளியாய்ச் சொந்தங்கள் சேர்ந்திட
ஓலை அனுப்பிடுவோ மோம்பு .

மேலும்

சிந்தைக்கு விருந்தாகும் படைப்பு. மோம்பு என்றால் என்னவென்று சொல்லுங்கள் கவிஞரே. 11-Sep-2016 12:03 am
மிக்க நன்றி 10-Sep-2016 11:44 pm
மேலும்...
கருத்துகள்

மேலே