ஆண்மை தவறேல் - மரபு கவிதை

ஆண்மையது தவறினாலே
------ ஆண்மகனும் அழகில்லை .
ஆண்டவனால் தந்திட்ட
------- ஆளுமையை மாற்றாதீர் !


வேண்டுமெனில் கிட்டிடுமா !
------ வேதனைதான் மிஞ்சுமன்றோ !
மாண்புடையக் கற்புநெறி
------ மானிடர்க்குப் பொதுவன்றோ !!!


கள்வனாக வாழ்வதற்குக்
------- காளையர்கள் முற்பட்டால்
புள்ளிமான் போன்றதொரு
------- புவிமகளும் வரமாட்டாள் !


அள்ளியள்ளி அணைத்திடுங்கள்
------- அன்புடைய மனையாளை .
துள்ளுகின்ற மனத்தினிலே
------- தூய்மைநெறி சேரட்டும் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-17, 8:40 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 167

மேலே