ஒன்றும் புரியவில்லை

ஒன்றும் புரியவில்லை...
30 / 03 / 2025

பொய்யை சொன்னால்
உலகம் போற்றுது
உண்மையை சொன்னால்
அதுவே தூற்றுது
வேடம் தரித்தால்
கொண்டாடி மகிழுது
பாடம் சொன்னால்
பரிதவித்து ஓடுது
என்ன உலகமிது?
வந்து பிறந்துவிட்டேன்
வாழ்ந்தாக வேண்டும்
தப்ப வழியில்லை
தர்க்கம் இங்கு தேவையில்லை
ஏங்குவதில் ஒரு லாபமில்லை
வந்ததை ஏற்கும் மனமுமில்லை
பொய் சொல்லித்தான் ஆகவேண்டும்
வேடம் போட்டுத்தான் நடிக்கவேண்டும்
நான் போடும் கணக்கு ஒன்று
நடக்கின்ற கணக்கு வேறு
என்ன செய்யப் போகிறேன்?
எப்படி சமாளிக்கப் போகிறேன்?
தெரியவில்லை. ஒன்றும்
புரியவில்லை.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (30-Mar-25, 10:56 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : onrum puriyavillai
பார்வை : 43

மேலே