புலம்பல்
புலம்பல்..
30 / 03 / 2025
எடுப்பார் கைப்பிள்ளை ஆனேன்
தடுப்பார் இல்லாது தறுதலையாய்
துடுப்பார் இல்லாத கட்டுமரமாய்
துடிப்பாய் உலகை சுற்றிவந்தேன்
சூதும் சூழ்ச்சியும் சூழ நான்
மாதும் மதுவும் கையிலேந்தி
ஏதும் அறியா சிறுபிள்ளையென
ஏகாந்தமாய் இன்புற்றிருந்தேன்
நடைதளர்ந்து உதிரம் சுண்டி
நாடியொடுங்கி தோலும் சுருங்கி
வேண்டா குப்பையென
மூலையில் தூக்கி எரிந்தபின்
மூடிய பேழை திறந்தது
மூன்றாம் கண் விரிந்தது
ஆடிய ஆட்டம் அடங்கி
ஆறுதல் தேடி அலைந்து
ஆண்டவன் பாதம் சேர்ந்தது
ஆத்மாவில் அமைதியும் நிறைந்தது.