விதிவரைந்த வீதியிலே விடைத்தேடி போகிறேன்

விதிவரைந்த வீதியிலே
விடைத்தேடி போகிறேன் //1
ஊரிழந்து வீடிழந்து
நடைப்பிணமாய் சுற்றியே //2
உறவுகள் ஏதுமின்றி
ஊரூராய் அலைந்துமே //3
உயிரையே தக்கவைக்க
ஓடினேன் வெகுதூரம் //4
கால்களும் கடுகடுக்க
கையிலே எதுவுமின்றி //5
பசியின் கொடுமையினால்
பதறினேன் உயிர்வாழ //6
எடுத்தேன் முடிவு
எல்லாவற்றையும் இழந்தபின் //7
ஏனெனக்கு இந்த
வாழ்வென்று சிந்தித்தேன் //8
ஆனாலும் முடிவின்றி
ஆளாத்துயரில் அலைமோதினேன் //9
நாடிழந்து வாழ்ந்தாலும்
நமக்கேன் வாழ்வில்லை //10
உணர்ந்தே புறப்பட்டேன்
புலம்பெயர்ந்து வாழ்வதற்கு //11
புகலிடமொன்றிலே இன்று
புகழோடு வாழ்கின்றேன் //12

கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (28-Mar-25, 6:05 pm)
சேர்த்தது : kavithasan
பார்வை : 39

மேலே