kavithasan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : kavithasan |
இடம் | : FRANCE |
பிறந்த தேதி | : 12-Jul-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 434 |
புள்ளி | : 57 |
I AM KAVITHASAN FROM FRANCE
உண்மையான பாசமே
உயிரான நட்பாகும் //
எத்தனை துன்பத்திலும்
எதிரேவந்து நின்றிடுவான் //
சோதனைகள் வரும்போதும்
வேதனையை தீர்க்கும் //
விலங்கினமும் அதற்கு
விதிவிலக்கு அல்லவே //
பசிவந்தால் மட்டுமே
பகுத்தறிந்து வேட்டையாடும்//
கூடிவாழும் நண்பனே சிலவேளை
குரல்வளையை கடித்திடுவான் //
கவிதாசன்
இருவரும் ஒன்றாய் இணைந்தே கற்றோமே //1
அனைத்துப் பெண்களிலும் அழகானவள் நீயென்றேன் //2
மனதினிலே ஆசைகளை மகிழ்வோடு வளர்த்தேனே//3
காதலைச் சொல்வதற்கே காலநேரம் பார்த்தேனே//4
ஆனாலும் பயம்கொண்டு சொல்லாமல் தவித்தேனே//5
இருந்தாலும் என்னிதயம் சொல்சொல் என்றதுவே //6
கடிதமாய் வரைந்தாலும் கைகளுமே உதறுகிறதே//7
உண்பதற்கு உணவிருந்தும் உன்னினைப்பு மறுக்கிதே//8
என்றாலும் உன்வாழ்வில் என்வாழ்வும் உள்ளதென்று//9
மனத்தினைத் திடமாக்கி மடலாகக் கொடுத்துமே //10
காதல் சொல்ல வந்தேன் மன்னிப்பாயா//11
காதலின் மகத்துவத்தோடு கடைசிவரை வாழ்வோமே//12
கவிதாசன்
பூவான பெண்ணின்
புன்னகையில் மெய்மறந்தே //1
பூக்களைக் கொடுத்தே
கண்ணசைவில் மெய்சிலிர்த்தேன் //2
நித்தமும் சந்தித்து
நெடுநாளாய் பழகினாலும் //3
காதலா இல்லை
கனிவான பேச்சா //4
என்றறியாமல் காதல்
சொன்ன நிமிடங்கள் //5
இதயம் படபடவென்று
அடித்துமே வியர்த்ததுவே // 6
என்னையும் அச்சத்தில்
ஏதேதோ செய்ததுவே //7
காதலைப் பரிமாறிக்
கயல்விழியும் முத்தமிட்டே //8
இனிய வாழ்க்கை
இன்பமாய் மலர்ந்திடவே //9
இருவரும் பேசியே
இணைந்து மகிழ்ந்தோமே //10
கவிதாசன்
விதிவரைந்த வீதியிலே
விடைத்தேடி போகிறேன் //1
ஊரிழந்து வீடிழந்து
நடைப்பிணமாய் சுற்றியே //2
உறவுகள் ஏதுமின்றி
ஊரூராய் அலைந்துமே //3
உயிரையே தக்கவைக்க
ஓடினேன் வெகுதூரம் //4
கால்களும் கடுகடுக்க
கையிலே எதுவுமின்றி //5
பசியின் கொடுமையினால்
பதறினேன் உயிர்வாழ //6
எடுத்தேன் முடிவு
எல்லாவற்றையும் இழந்தபின் //7
ஏனெனக்கு இந்த
வாழ்வென்று சிந்தித்தேன் //8
ஆனாலும் முடிவின்றி
ஆளாத்துயரில் அலைமோதினேன் //9
நாடிழந்து வாழ்ந்தாலும்
நமக்கேன் வாழ்வில்லை //10
உணர்ந்தே புறப்பட்டேன்
புலம்பெயர்ந்து வாழ்வதற்கு //11
புகலிடமொன்றிலே இன்று
புகழோடு வாழ்கின்றேன் //12
கவிதாசன்
என் எழுது கோலுக்கு
ஏக்கங்கள் நிறைய உண்டு
தமிழுக்கு தாக்கங்கள் !
திசை எட்டும்
சிதறியிருக்கும் எம்மினம்
வலிகள் சுமந்து ,
வாழ்வதற்காய் அலைகின்றனர் !
நிமிர்ந்து நின்று
உரிமை கேட்டவர் ,
காணமல் போனோர் பட்டியல் !
நீளும் துயரத்தில்
சிறைகளில்
விடியலை தேடும் உறவுகள் ,
விதியென நொந்துகொள்ள
இன்னும் என்ன
மந்தைகளா நாங்கள் !
சாபத்தின் சரித்திரங்கள்
ஈரமற்று தொடர,
கடந்த காலங்களின்
அவ நம்பிக்கைகளை
மாற்றுவோம் வாருங்கள் !
ஒன்றுபட்டு…………………………..
படித்தவன் தமிழன் என்று
பறைசாற்றியது யாழ் மண்.
எங்கும் இல்லா நூல்களெல்லாம்
கொட்டிக்கிடந்தது யாழ் நூலகத்தில்
அறிவாளியாக இருக்கும் தமிழன்
இன்னுமா பேரறிவாளனாக வரவேண்டும் !
தீ என்னும் வஞ்சகத்தால் நூலகத்தை
பொடிசாம்பல் ஆக்கிவிட்டு
படித்தவன் எவரும் இல்லாதிருக்க
பள்ளிமாணவருக்கே !
நெஞ்சத்தில் வஞ்சமுடன்
நிறைவேற்றியது போதைவஸ்தை
ஆண்டுஆண்டாய் அடிமைப்பட்டுக்கிடந்த
ஒரு சில தமிழர் கூட்டம்
அதற்குமா விதிவிலக்கு !
எத்தனை துயர் வரினும் ஏங்காத தமிழரினம்
இதற்குமட்டும் அடிமையாகி ஏன் தான் அழிகிறது
சிங்களம் நினைத்தபடி சிதறியது தமிழரினம் !
போதைக்கு அடிமையாக்கி
வாள் கத்தி கோட
செந்தமிழும் ,சிங்களமும்
சேர்ந்து வாழமுடியுமா?
சேர்ந்து வாழமுடியுமா?
சிறுத்தைகளும் ,ஓநாய்களும்
கூட்டில்
இணைய முடியுமா........
ஒரு கூட்டில் இணைய முடியுமா?
பச்சோந்திக் கூட்டம் எல்லாம் .....
பகடை வித்தை காட்டுது !
புலி வந்து
விட்டதென்றால்
ஓட்டம் பிடித்து ஓடுது ......
ஓட்டம் பிடித்து ஓடுது !
அரசிடம் தஞ்சம் கேட்டு
மண்டியிட்டு அலையுது ......
மண்டியிட்டு அலையுது !
புலிகளை அழித்து நீயும்
விதைத்து விட்டாய் ......
சிங்களமே !
விதை எல்லாம் முளைக்கும்
என்று
உனக்கு எண்ணத்
தெரியலேயே.......
உனக்கு எண்ணத்
தெரியலே !
முளைத்த பின் தாக்கு பிடிக்க
மு
தமிழா தமிழா சற்று சிந்தித்து பார்,
*கட்சத்தீவு உன்னுடையது
ஆனால் நீ போக
முடியாது,
*வங்கக்கடல் உன்னுடையது
ஆனால் நீ மீன்
பிடிக்க முடியாது,
*காவிரி ஆறு உன்னுடையது
ஆனால்உனக்கு தண்ணீர் கிடையாது,
*முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால்
உன்னால் நீரை தேக்க முடியாது,
*பாலாறு உன்னுடையது
ஆனால் அதிலிருந்து
நீரைப் பெற முடியாது,
*நெய்வேலி உன்னுடையது
ஆனால் 75%
மின்சாரம் வெளி மாநிலத்திற்கு,
*இராசராசன் கட்டிய பெரிய கோவில்
உன்னுடையது ,
ஆனால் தமிழில் நீ வழிபட முடியாது,
*நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது
ஆனால் தமிழில் வழக்காட முடியாது,
*அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,
ஆனால்
தமிழில் உயர்கல்வ
இன்றைய பட்டி மன்ற கேள்வி.
பேச்சாற்றல் மிக்கவர் ஆண்களா? இல்லை பெண்களா?
யோசித்து கருத்துகளை எழுத்துங்கள்.
பொக்கிசமாய் வளர்த்த பொண்ணு
புறமுதுகு காட்டி எங்கோ
புறப்பட்டுப் போனதேனோ !
காமம் என்னும் காதல் வலையில்
கண்டவள் பின் திரிந்த ஒருவன்
கதைகள் எதுவும் தெரியா பொண்ணு
கை பிடிக்க சென்றாளோ !
பெற்றவர் மனம் தனையே
காதலுக்கு தான் எதிரி என்று
நம்பவே வைத்துவிட்டு
கழுத்தையே நெரித்ததுபோல்
கரை ஒதிங்கிப் போனாளோ!
வந்தகடன் கொடுக்கவில்லை
விசா எதுவும் அவனுக்கில்லை
வேலையற்ற வீணகனாய்
வீதி எல்லாம் சுற்றிவிட்டு
காமம் என்னும் பசிதீர்க்க
ஆசை பல வார்த்தைகூறி
அழைத்தே சென்றானோ !
எத்தனையோ பெண்களை ஏமாற்றி
கடைசியில் ஏமாந்து
இருதலைக் கொள்ளி எறும்பாக
இப்பொண்ணின் நிலையாச்சு
உயிர் அ