மாற்றம் வேண்டும்………

என் எழுது கோலுக்கு
ஏக்கங்கள் நிறைய உண்டு
தமிழுக்கு தாக்கங்கள் !
திசை எட்டும்
சிதறியிருக்கும் எம்மினம்
வலிகள் சுமந்து ,
வாழ்வதற்காய் அலைகின்றனர் !
நிமிர்ந்து நின்று
உரிமை கேட்டவர் ,
காணமல் போனோர் பட்டியல் !
நீளும் துயரத்தில்
சிறைகளில்
விடியலை தேடும் உறவுகள் ,
விதியென நொந்துகொள்ள
இன்னும் என்ன
மந்தைகளா நாங்கள் !
சாபத்தின் சரித்திரங்கள்
ஈரமற்று தொடர,
கடந்த காலங்களின்
அவ நம்பிக்கைகளை
மாற்றுவோம் வாருங்கள் !
ஒன்றுபட்டு…………………………..

எழுதியவர் : kavithasan (19-Feb-16, 10:49 pm)
பார்வை : 87

மேலே