காதல் கவிதைத் துளிகள்
அவள் முகத்தைப் பார்த்து
தன்னை அலங்கரித்துக் கொண்டது
கண்ணாடி.
அவள் வருகின்ற வீதியில்
விற்பனைக்கு கிடைப்பதில்லைப்
பூக்கள் .
கோடை காலத்தில்
ஆலங்கட்டி மழை.
அவள் பார்க்கிறாள் .
கண்ணைப் பறிக்கவில்லை மின்னல்.
காணவில்லை இதயம் .
கடந்து போயிருக்கிறாள் அவள் .
*மெய்யன் நடராஜ்

