மெய்யன் நடராஜ் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : மெய்யன் நடராஜ் |
இடம் | : punduloya srilanka |
பிறந்த தேதி | : 18-Aug-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 10249 |
புள்ளி | : 5947 |
எமது இலங்கை வானொலி பத்திரிகைகள் போன்றவற்றிற்கு நீண்ட காலமாக மெய்யன் நடராஜ் எனும் என் சொந்த பெயரிலேயே கவிதை சிறுகதைகள் எழுதிவருகிறேன் .சமீப காலமாகத்தான் இணைய சஞ்சிகைகளுக்கும் எழுத ஆரம்பித்துள்ளேன். நாடு கடந்து வாழ்ந்துகொண்டு இருந்தாலும் எழுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அண்மையில் படிக்கட்டு என்ற எனது முதலாவது கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளேன் இரண்டாயிரத்து இருபத்தியிரண்டில் மூச்சுவிடும் காதுகள் என்னும் ஹைக்கூ தொகுப்பும் காதலியின் கல்யாணம் என்னும் சிறுகதை தொகுப்பும் வெளியிட்டுள்ளேன்
*************************
உயிருக்கு உலைவைக்கும் வண்ணம்
உருளுகின்ற சக்கரத்தின் எண்ணம்
கயிறின்றித் தூக்கிலிட்டுக்
காவுகொளும் கோரங்கள்
துயிலாமைக் குள்வீழும் கண்ணும்
*
கவனங்கள் சிதறுகின்ற வேளை
காலனவன் காட்டுவன்தன் வேலை
எவனுக்கும் அஞ்சாதார்
எமனுக்கு அஞ்சியேனும்
தவமாகச் செலுத்துவரோ நாளை
*
வாகனங்கள் செலுத்துகின்ற பேர்தான்
வாழ்க்கையையும் செலுத்துகின்ற பேர்தான்
ஆகமொத்தம் உயிரிங்கு
அனைவருக்கு மொன்றாகும்
சாகசங்கள் செய்யாதீர் நீர்தான்
*
விபத்துக்கள் உண்டாக்க வென்றே
விபரீத விளையாட்டுக் கொண்டே
அபகீர்த்தி ஏற்படுத்தி
அபலைகளும் உருவாக்கிச்
சுபமற்ற முடிவாக்கல் நன்றோ?
*
எல்லோர்க்கும் எல்லாமும் இல்லை என்னும்
எழுதாதச் சட்டத்தின் ஏடு நூறு
சொல்வோரும் சொல்லாத சுமைக ளோடு
சுவைக்காமல் அழிகின்ற சுகங்கள் நூறு
நில்லாமல் உழைத்தாலும் நிலைத்தி டாமல்
நீர்மேலே எழுத்தாகும் நிசங்கள் நூறு
மெல்லாமல் விழுங்காமல் மெல்லக் கொல்லும்
மிடுக்கான விசமிங்கே மேலும் நூறு
*
கல்லாமல் அரசாண்டு காசு சேர்த்து
களிக்கின்றக் காட்சிக்கண் காண நூறு
வெல்லாமல் தோல்விகளை வெற்றி யாக்கி
வீறுநடை போடுகின்ற வீணர் நூறு
வில்லாகி வளைபுருவ வீச்சைக் கொண்டு
வில்லாதி வில்லனையும் வீழ்த்தும் நூறு
செல்லாதக் காசாகிச் சீர்மை குன்றிச்
செருப்பாகித் தேய்ந்தறுந்த சேதி நூறு
*
நெல்லாக விலையுமென
***********************
உடும்பு முடும்பொடு ஒத்தொழுகும் கூட்டுக்
குடும்பத்து ளொத்தொழுவு முண்டோ? - சுடுமூஞ்சும்
குத்தும் சுடுசொல்லும் கொல்லும் முணுமுணுப்பும்
கொத்தும் கொடுக்கோடு கொள்
***********************
உடும்பு முடும்பொடு ஒத்தொழுகும் கூட்டுக்
குடும்பத்து ளொத்தொழுவு முண்டோ? - சுடுமூஞ்சும்
குத்தும் சுடுசொல்லும் கொல்லும் முணுமுணுப்பும்
கொத்தும் கொடுக்கோடு கொள்
**********"*********"***
காதிலாது கானமேது காலிலாது வீதியேது
காடிலாது ஆறுமேது கூறடா
ஓதிடாது வேதமேது ஓடிடாது மேகமேது
ஓடமேனு நீரிலாது ஏதடா
மாதிலாது வீடுமேது மாசிலாத தாருமேது
மாறிடாத நாளுமேது மானிடா
தாதிலாத பூவுமேது தாயிலாது சேயுமேது
தாறுமாறு பேசிநீதி கூடுமோ?
*
கூவிடாது சேவலேது கோபமோடு தாபமேது
கூறிடாது ஆறலேது கூறடா
பூவிலாது காயுமேது போதையோடு பாதையேது
போரிலாடு தீவிலூறு தானடா
பாவியோடு பாசமேது பாலையோடு
சோலையேது
பாறையோடு வேருமேது பாரடா
சாவிலாத தோருமாறு சாதிநூறு கூறுபோட
சாதியாது பாவியாத லேனடா?
*
நாறிடாத மீனுமேது நாளிலாது மாதமேது
நாடிடாம லேதுமேது நாயகா
ஆறிலாம லேழும
**************
ஒவ்வொரு குச்சியும்
ஒவ்வொரு தூண்
கூடுகட்டும் குருவிக்கு
*
உதிர்ந்து விழுந்த
குச்சிகளின் பெறுமதி
குருவிகளுக்கே தெரியும்
*
ஒரு குடும்பத்தின்
வசந்த மாளிகையை
அலகுகளால் தூக்கும்
குச்சிகளைக் கொண்டே
அமைத்து விடுகின்றன குருவிகள்
*
காற்றோட்டத்திற்கு குறைவில்லாமல்
அதே வேளை கதவு சன்னல்களுக்கு
வாஸ்து பாராமல்
உறுதியும் உத்தரவாதமும் கொண்டு
சொந்த முயற்சியிலேயே
கூடமைக்கும் குருவிகள்
எந்த வங்கியிலும்
கூடமைப்பு லோன் வாங்குவதில்லை
*
குழந்தைகள் பெற்றபின்னும்
வாடகை வீட்டில்
வாழும் பழக்கத்திற்கு
அடிமையாகிப்போன
நம்மைப்போலன்றி
முட்டையிடுமுன்பே
கூடுகளம
*****************
முடிந்தவரைத் தன்பேரை முன்நிறுத்தப் பார்ப்பார்
முழங்குகின்ற வார்த்தைகளில் முழுப்பொய்யை வார்ப்பார்
இடிவிழுந்த மரப்பூவில் எழில்மாலைக் கோப்பார்
இரவின்மேல் பனித்துளியை இட்டதுதா னென்பார்
வடிந்துவிட்ட வெள்ளத்தில் வள்ளங்கள் ஓட்டி
வகைவகையாய் உதவியதில் வள்ளல்தா னென்பார்
கடிந்துநிற்கும் கேட்போரைக் கண்ணெடுத்தும் பாரார்
கதைமுடிக்கச் சொன்னாலும் காதெடுத்துக் கேளார்.
*
அடுத்தவரின் நேரத்தை அபகரிக்கச் செய்யும்
அடுக்கடுக்காய் பொய்களினால் அரங்கமழை பெய்யும்
எடுத்ததற்கும் குறைகுற்றம் ஏதேனும் நெய்யும்
இருப்போரின் செவியுணர்வை எரிச்சலிட்டுக் கொய்யும்
தடுப்பதற்கு ஆளிலையேல் தன
பூங்குயிலுக் துத்தேன் குரல்கொடுத்துக் காட்டிலுள்ள
மூங்கிலுக்குள் சங்கீதம் மூடிவைத்து – தீங்கிலாத்
தேனை மலருக்குள் தேக்கிவைத்துப் பார்த்தவனே
பூனைக் கெலிபடைத்தான் பார்.
ஊன்றி எழுந்தே உயர்
நேரிசை வெண்பா
முன்னேறு மெண்ணம் முளைத்திடும் காலத்தில்
பின்தங்கி டாதே! பெரும்பயம் - உன்முன்னே
தோன்றி உடன்படா தோர்நிலைக் குட்படுத்தும்.
ஊன்றி எழுந்தே உயர். - மெய்யன் நடராஜ்
வாழ்த்துகள் மெய்யன் நடராஜ்!
வெண்பாப் புனைய முனைவோர் மேலேயுள்ள பாவினை வாசியுங்கள்.
தகுந்த எதுகையும், பொழிப்பு மோனையும் அமைத்தும், தக்க ஈற்றடியும் அமைத்தும் எழுதியிருக்கிறார்.
எந்த முயற்சியும் எடுக்காமல், தான் எழுதியதே பா என்று விவாதம் செய்யாமல், சீர்களையும், தளைகளையும், புணர்ச்சி விதியையும் அறிந்தும், காய்ச்சீர் வருமிடங்களில் இரு மாச்சீர்களை இணைக்காமலும், விளாங்காய்ச்சீர் வராமலும், கண்டபடி வகையுளி செய
======
இன்றைய உறக்கத்தில்
இந்தக் கனவு வந்தால்
நல்லதென்று யாரும்
எதிர்பார்ப்பதில்லை.
*
எதிர்பாராத கனவு வந்துவிட்டால்
எவரும் அதைப்
போ வராதே என்று
விரட்டியடிப்பதுமில்லை
**
யார் என்ன கனவு
காணவேண்டும் என்பதையும்,
யாருக்கு எப்போது கனவு வரும் என்பதையும்
கண்கள் தீர்மானிப்பதில்லை
**
சில புத்தகங்களை விரிக்கும்போது
வரும் தூக்கத்தைப்போல
கனவுகள் நமக்கு
எளிதாக வந்துவிடுவதில்லை
**
சில அலுவலக மேசைகளைக்
காணும் அதிகாரிகளுக்கு
வரும் தூக்கத்தைபோல
சில அவசியமான ஆசைகளில்
மிதக்கும்போது
கனவுகள் நமக்கு வந்து விடுவதுமில்லை
**
காத்திருக்கும்போது வாராமல்
கண்ட கண்ட நேரங்கள
மெய்யன் நடராஜ்
பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட
இன்னும் ஒரு முறை காதலிக்கத் தூண்டுகிறது..... ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் ஒரு முறை காதலிக்கத் தோன்றுகிறது.....
"காதல் காதல் காதல்...... போயின்....... சாதல் சாதல் சாதல்...."
"அது................... சொல்லாமல்........ ஏங்க ஏங்க.......... அழுகை வந்தது...........................எந்தன் காதல் சொல்லும் போது சொல்லாமல் வந்த அழுகை நின்றது......"
"வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா.................. வந்து தழுவுது பார்......"
காதல்.........ம்ம்ம்ம்ம்............
கவிதைக்குள் நுழைந்து வெளி வராமலே போகும் காதலுக்குள்..... அவள்....
அவளுக்குள் நான்....
எங்களுக்குள் காதல்...
காதலுக