ஊன்றி எழுந்தே உயர் - நேரிசை வெண்பா
ஊன்றி எழுந்தே உயர்
நேரிசை வெண்பா
முன்னேறு மெண்ணம் முளைத்திடும் காலத்தில்
பின்தங்கி டாதே! பெரும்பயம் - உன்முன்னே
தோன்றி உடன்படா தோர்நிலைக் குட்படுத்தும்.
ஊன்றி எழுந்தே உயர். - மெய்யன் நடராஜ்
வாழ்த்துகள் மெய்யன் நடராஜ்!
வெண்பாப் புனைய முனைவோர் மேலேயுள்ள பாவினை வாசியுங்கள்.
தகுந்த எதுகையும், பொழிப்பு மோனையும் அமைத்தும், தக்க ஈற்றடியும் அமைத்தும் எழுதியிருக்கிறார்.
எந்த முயற்சியும் எடுக்காமல், தான் எழுதியதே பா என்று விவாதம் செய்யாமல், சீர்களையும், தளைகளையும், புணர்ச்சி விதியையும் அறிந்தும், காய்ச்சீர் வருமிடங்களில் இரு மாச்சீர்களை இணைக்காமலும், விளாங்காய்ச்சீர் வராமலும், கண்டபடி வகையுளி செய்யாமலும் எழுதினால் வெண்பாக்கள் சிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.