ராஜீ 27052025
வங்கிகளில் தங்கத்தை வைத்திருப்பார்கள்
இந்தத் தங்கம் வங்கியையே தன் வசம் வைத்திருந்தது..
வார்த்தைகளை கையாள்வதில் அனாயாசம்..
சிந்திப்பதில் எவரெஸ்ட் சிகரம்...
நட்பில் இல்லை ஏழை பணக்காரன் வித்தியாசம்..
இது இவரது சிறப்பு..
அது லட்சுமி.. ராஜ லட்சுமி..
ஜி... ராஜி...
எலக்ட்ரான்.. புரோட்டான்.. நியூட்ரான்..
மைக்ரோ கண்ட்ரோலர்..
மைக்ரோ புராசஸர்..
அணுக்களை அலசத்
தெரிந்த ராஜலெட்சுமிக்கு
வங்கிகளின்
இன்கம் எக்ஸ்பென்டிச்சர்
பேமெண்ட்.. ரெஸிப்ட்
லாஸ் அண்ட் ப்ரோஃபிட்
டெபிட்.. கிரெடிட்
அஸ்ஸெட்... லயபிலிட்டி
அலசுவது இவருக்கு
திருநெல்வேலி அல்வா
அதன்படி செயல்படுவது
பாளையங்கோட்டை பால்கோவா..
பணி நிறைவு சென்னை மாநகரம்
மனம் நிறைந்து வாழ்வது
பொருநை நதியோரம்..
ஷேர் லொகேஷன் போட்டால்
கூகுள் மேப் இதனைச் சொல்லும்..
மண்வாசனை வெல்லும்..
ஏடிஎம்.. செக்.. டிடி.. கர்நாடகா வை எதிர்பார்க்கும் காவேரி..
நினைத்ததை இவர் எழுதுவது.. ஜீவநதி தாமிரபரணி...
வாழ்க்கை இவரை வழி நடத்தவில்லை
வாழ்வை இவர் வழி நடத்துகிறார்..
இது இவரது இன்னொரு சிறப்பு..
இவரது முகத்தில் என்றும் இருக்கட்டும் சிரிப்பு
தோழி ராஜலட்சுமி
வசந்த வாழ்த்துகள்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்..
அன்புடன்..
ஆர்.சுந்தரராஜன்.
🙏😃🌹🍫