கெயில் விருது எல் சி
டாக்டர் லதா கிறிஸ்டி
பிரபஞ்சம்.. இவர்
பெற்ற விஞ்ஞானம்...
ஒற்றுமை ஒன்று உண்டு..
இரண்டும் விரிவடைந்து
கொண்டே இருக்கும்..
இவர் கற்ற ஏரோஸ்பேஸ்..
மைக்ரோவேவ் அறிவின்
அலைகள் ஓய்வதில்லை..
பயணங்கள் முடிவதில்லை..
விஞ்ஞானத்தில் மெய்ஞானம்
மெய்ஞானத்தில் விஞ்ஞானம்
இவரது பேப்பரும் பேனாவும்
அளந்து எடுக்கும்..
அதில் அழகு இருக்கும்..
ஒளி ஆண்டுகள்
மின்காந்த அலைகள்
இவற்றில் இவருக்குள்ள புரிதல்
நவக் கிரகங்கள் மீது பாய்ச்சும்
அறிவுச் சந்திரனின்
பௌர்ணமி வெளிச்சம்...
இவர் எழுதும் புத்தகங்கள்...
பக்கங்கள் யாவும் பூவனங்கள்
மொழித் தேனில் ஊறும்
கருத்துப் பலாச் சுளைகள்..
மணித்துளி ஒவ்வொன்றும்
இவருக்கு வரம்...
அதனால் விருதுகள்
ஆனது இவரது வசம்..
அன்று இவருக்கு
பெண் சாதனையாளர் விருது..
இன்று உலகளாவிய சிந்தனை
தலைமைப் பண்பிற்கு
கெயில் விருது..
டாக்டர் லதா கிறிஸ்டி.. இவர்
ஓய்வுக்கு ஓய்வு கொடுப்பார்
ஆகாயத்திற்கும் அறிவியல்
சொல்லிக் கொடுப்பார்...
அகவை அறுபது.. அது
இளமையின் பெருமை
முதுமையின் இளமை..
என்றும் காணட்டும் இனிமை
லதா கிறிஸ்டி.. நலம் வாழ
நல் வாழ்த்துகள்...
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
👍🪷