லதா கிறிஸ்டி 22052025
வயது இருபதில்
கல்லூரி வழியனுப்பும்..
வயது அறுபதில்
பணியிடம் வழியனுப்பும்..
பூமித் தாய் நாம் வாழும்
வரை வாழ்த்தி இருக்கும்..
டாக்டர் லதா கிறிஸ்டி இவர்
இறைவனின் அற்புத சிருஷ்டி..
அறிவியல் அறிவில்
வசிப்பது நலம்.
எண்ணங்களை எழுதி
மகிழ்வது சுகம்..
உணர்ந்ததை உலகம்
அறிய பகிர்வது வரம்..
ஆராய்ச்சியில் திளைப்பது
இனிய அனுபவம்..
இவை எல்லாம் ஆனது
இவரது வசம்...
புன்னகை பூக்களின் தேசம்
இவரது ராஜாங்கம்..
நூறு நூறு கோடி வருஷம்
சூரியன் தரும் வெளிச்சம்..
ஆயிரம் வருஷம் தாண்டியும்
இந்த சத்திரனின் எழுத்து
தரும் அறிவு வெளிச்சம்..
நாட்களை நகர்த்தும் நேர்த்தியில்
மலர்கள் பூத்துக் குலுங்கும்
நந்தவன சந்தோசம்
நாளெல்லாம் இவருக்கு வசப்படும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
டாக்டர் லதா கிறிஸ்டி...
👍🪷💐🍫