தூணைப் பிளந்து வந்தாய் நரசிங்கனாய் பஃறொடை வெண்பா
தூணைப் பிளந்துவந் தாய்நர சிங்கனாய்
வீணன் இரண்யன்தன் மார்பை பிளந்தாய்உன்
கூர்நகத்தால் பொங்கும் குருதி தனைப்பருகி
போர்முழக் கம்செய்தாய் பக்தன்சொல் காத்தாய்நீ
கார்மாலே எம்மையும்காப் பாய்
பொருட் குறிப்பு :
பக்தன்சொல் --தந்தை இரண்ய கசிபு மகன்
பக்த பிரகலாதனை உன் ஹரி இந்தத் தூணில்
இருக்கிறானா என்று ஒரு தூணில் வாளால் அடிக்க
இந்தத் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என் ஹரி
என்று துணிச்சலுடன் சொல்ல கார்மல் -கரிய திருமால்
பக்தன் சொல் காக்க தூணைப் பிளந்து நரசிம்மானாய்
வந்த கதையை சொல்கிறது இந்தக் கவிதை

