மது மயக்கம்

மது மயக்கம்

மது மயக்கம் மனதில் உள்ளதை மறக்க செய்யும்
மயக்கம் தொடரும் வேளையில் தைரியம் தெரியும்
தைரியம் மனதை சூழும் வரை நடப்பது தெரியாது
நடப்பதை அறிந்தவுடன் மனம் நிம்மதி இழக்கும்
நிம்மதி இழந்த மனம் வருத்தத்தில் மூழ்கும்
வருத்தத்தை எண்ணி கண்கள் கலங்கிடும்
கலங்கிய கண்கள் கண்ணீர் சிந்த மனமும் உருகும்
உருகிய மனம் ஆதரவை தேடி அலையும் வேளையில்
அன்புள்ள ஒருவர் கிடைத்தால் மீண்டும் மதுவை வேண்டாது

எழுதியவர் : கே என் ராம் (4-Nov-25, 1:19 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : mathu mayakkam
பார்வை : 11

மேலே