ஊருக்கு நல்லதனை ஓது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பல் ஓசை)

ஆயிரம்பேர் வந்திங்கே ஆயிரந்தான் சொல்லிடுவர்
நோயின்றி வாழ்வதற்கும் நொய்யதுயர் - போயிடவும்
நேருக்கு நேர்நின்று நீங்கியதே என்றுசொல்லி
ஊருக்கு நல்லதனை ஓது!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jan-26, 9:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே