கே என் ராம் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கே என் ராம் |
இடம் | : டல்லாஸ் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 596 |
புள்ளி | : 394 |
அமெரிக்காவில் பதினெட்டு ஆண்டுகளாக பணி புரிகிறேன் .சிறிய குடும்பம். அமெரிக்க குடி உரிமை இருந்தாலும் மனதளவில் இந்தியன்.மனைவி, மகள் இருவரும் தமிழ் பேசவும் படிக்கவும் தெரிந்தவர்கள்.கடவுள் நம்பிக்கையும், கலாச்சார பண்பையும் பெரிதும் மதிக்கும் ஒரு குடும்பம்.
மாமியாரின் அறம்
கதிர் பிறந்து சில வருடங்களில் தனது தந்தையை ஒரு விபத்தில் இழந்தான். அவன் அம்மாவிற்கு அது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திட அவள் எதிலும் நாட்டமில்லாமல் தன்னை எந்த விதத்திலும் கவனிக்காமல் தனது நேரம் முழுவதையும் அவன் வளர்ச்சியிலேயே செலுத்தினாள். அவனை வளர்ப்பதற்கு வேலையை எடுத்து கொண்டு ஒரு வயதானவர்கள் காப்பகத்தில் உதவியாளராக இருந்து அங்குள்ளவர்களுக்கு வேண்டியவற்றை செய்து வந்தாள். அவளது குணத்தையும் பணிவிடையையும் பாராட்டாதவர்களே அந்த காப்பகத்தில் இல்லை. நல்ல உணவு சமைப்பதும்,இருக்கும் இடத்தின் சுத்தமும் அவள் விரும்பி எடுத்து செய்த வேலைகளில்
நவராத்திரி
அழகை விடுத்து அகிலம் காக்க
ஆயுதங்கள் பல கையில் ஏந்தி
இன்முகமும் கனலாக உருமாறி
ஈசன் இட்ட அந்த கட்டளையை
உறுதியுடன் உண்மையாக்கி விட
ஊண் தவிர்த்து கடும் தவமிருந்து
எட்டுகைகள் கொண்டு எத்திசையும் நடுங்கிட
ஏவினாள் கணைகளையும் சூலத்தையும்
ஐயம் கொண்ட மனங்கள் மகிழ்ந்திட
ஒருதுளி உதிரமும் நிலத்தில் வீழாது உறிஞ்சினாள்
ஓசையின்றி சாய்ந்தான் எருது தலை அரக்கனும்
மங்கையின் கைகொண்டு மடிவேன் என்ற மகிஷனை
மாய்த்திட தேவி தவம் எடுத்து கொண்ட நவராத்திரியை
நல்லிசை கொண்டு வாழ்த்தி வணங்கி கொண்டாடிடுவோம்
விளையாட்டுப் பொய் வினையானது
பாபுவும் யாழினியும் கோவையில் பக்கத்து பக்கத்து தெருக்களில் வாழ்ந்து வந்தவர்கள். பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருவரும் நல்ல நண்பர்கள் எல்லா விஷயங்களையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு இருவரும் சேர்ந்து பலவற்றில் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், பட்டம் வாங்கிய பின் இரு வருடங்கள் அங்கும் இங்கும் வேலை பார்த்த பின் பாபு அரசு வேலையில் சேர முடிவெடுத்து அதற்கு வேண்டிய அரசுத் தேர்வை எழுத முடிவு செய்தான் இதைக்கேட்ட யாழினி நானும் எழுதுகிறேன் என்று பாபுவோடு சேர்ந்து கொண்டாள். இருவரும் போட்டி போட்டுப் படித்
வாழ்க்கைப் பயணம்
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ
என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
_
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி,,,,,,,,,,,,,,,,,
அந்தத் திரை மலர்ந்து ஒரு மெல்லிய காலை வணக்கம் கூறியது...
அந்த பெரிய அறையில் சற்று இடைவேளி விட்டு இரண்டு கட்டில்கள்.. இரண்டுக்கும் பொதுவாக ஒரு சிறிய மேசையில் இரண்டு சிறிய குப்பிகளில் குடி நீர், தனித்தனியாக.... ஒரு நோட்டுப் புத்தக அளவிலுள்ள ஒரு தொடுதிரைக் கணினி... கட்டில்களுக்கு அருகில் வாக்கர் (walker) வைக்கப் பட்டிருந்தது...
பளிச்சென்று வெள்ளை அடிக்கப்பட்ட சுவரில் ஒரே ஒரு படம். அதன் மறைவில் கண்காணிப்புக் கருவி... சுவரில் தெரிந்த அந்த மிகப் பெரிய திரை, தொலைக்காட்சித் திரைபோல் இருந்தது. அந்தத் திரை மூலம்தான் அவர்களது தினசரி நலம் விசாரிப்பு, மருத்துவ உதவி, தகவல் பரிமாற்றம்.. எல்லாம்.
6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"
கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..
அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a dome