பபூமா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பபூமா |
இடம் | : கல்லிடைக்குறிச்சி |
பிறந்த தேதி | : 01-Jun-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 344 |
புள்ளி | : 18 |
நான் திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் பிறந்தவள் .
நான் ஒரு முதுநிலை பட்டதாரி (வேதியியல் துறை ).
பிறக்கும் போது
தாயின் கைப்பிடியில் .....
வளரும் போது
தந்தையின் கைப்பிடியில் ......
வளர்ந்தபின்
தம்பிகளின் கைப்பிடியில் .......
இன்றோ !!
வாழும் போது
உந்தன் கைப்பிடியில் .......
அந்த கைகள் மாறலாம் ,
என்னை விட்டு நீங்கலாம் ,
அனால் !!
உன் கரங்கள்
என் கரம் விட்டு
நீங்கலாகாது !!!!
வேண்டி கொள்கிறேன் ....
இறைவனிடம் ,
என்றும்
""தீர்க்க சுமங்கலியாக வாழ ""
வேண்டுமென ........
யார் அவள்?
என்னையே உற்றுப்பார்க்கிறவள்..!
ஆண்மகனாய் இருந்தும்
தலை கவிழ்த்துக்கொண்டேன்.
லேசாக தைரியத்தை
வரவழைத்துக்கொண்டு,
மெல்ல தலை தூக்கினேன்...!
ஒரு திண்டின் மேல் நிற்கிறாள்.
இரண்டு பாதமும், பதித்து
திண்ணமாய் நின்று கொண்டிருந்தாள்!
வாழைப்பூ விரல்கள,
கச்சிதமான பல பல நகங்கள்.
விரல் இடுக்கில் என்னை இழுத்து
விழுங்கிக் கொண்டிருந்தது.
கூட்டமாய் திரியும்
பட்டாம்பூச்சிகள் கணுக்காலை,
வளைத்து தொங்கிக் கொண்டிருந்தது
வழு வழு கொலுசுகள்.
அசையாமலிருந்தும்
கிண்கிணி மணி காதினுள்
சதா ஒலித்தபடியே இருந்தது..
பாதம் சுற்றிலும்
வருடி எடுத்த வரி வரி
வளைவுகள்.
ஒவ்வொரு
உன்னால் முடியாதென்று நீயே நினைத்து
மூலையிலே முடங்கி கிடக்கதே,
தோல்விகளை கண்டு துவண்டு போகதே,
உறங்கும் விதை விழிக்கும்வரை
உறையிட்ட வெற்று பொருள்தான்,
உறங்கும் மனிதா நீயும் அப்படிதான்,
உனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும்
உன்னை நீயே எழுப்பி,
உலகத்தை உறுதியோடு பாருடா,
வானம் ஒன்று வாழ்க்கையும் ஒன்று
இதில் யாருக்கும் வேறுபாடில்லை,
ஒர்சாண் வயிற்க்கு மேலே
ஏதுவும் நிரம்புவதில்லை,
தன்னம்பிக்கையை வளர்த்திடு,
தடைகளை உடைத்திடு,
தோல்விகளை படிகட்டாக்கி
வெற்றி கோட்டையை வென்றிடு,
" பூக்களின் மலர்வும் ...
" உனது புன்னகையும் ...
" ஒன்றேன கவிதை எழுதினேன்!
" உனது புன்னகையின் மீது...
" பொறாமை கொண்ட பூக்கள் ...
" அன்றே வாடிவிட்டன !
" வாடாத உனது புன்னகையை...
" அன்றே வாடும் பூக்களோடு..
" ஒப்பிட்டது தவறு தானே?
" நான் யாரை சமாதானம் செய்வது?
" பொறாமைக் கொண்டப் பூக்களையா?
" ஒப்புவமை ஒழுங்காக இல்லையென்று...
" கோபம் கொண்ட உன்னையா?
வகுப்பறை மேஜையில்
எழுதிய அவள் பெயர்,
தூரம் இருந்து ரசித்த
அவள் உரையாடல்கள்,
அவள் அழுவதை பார்க்க
முடியாமல் அழுத நேரங்கள்,
அவள் போவதை தெரிந்து
வழிதவறிய என் பாதைகள்,
அவள் வராத நாட்களில்
தோன்றும் பெரும் கனம்,
வேறாரும் அவளை நெருங்கினால்
உண்டாகும் கோபம்,
அவளறியாமல் அவளோடு
நடைபோட்ட பயணங்கள்,
இறுதிவரை அவள் கண்களை
தாண்டி போகாத என் வார்த்தைகள்...
இன்னும் இதயத்தில் இருக்கிறது,
ஒரு ரனமாய்,
அவள் நினைவுகளோடு
என் காதல்....
கண்கள் கண்ட பின்
காதல் கொண்ட
காதலியின் அன்பை விட..
கண்கள் காணும் முன்
நம் மீது காதல் கொண்ட
தாயின் அன்பு
உண்மையானது உன்னதமானது..!
தனிமை கொஞ்சம்
வித்தியாசமானது
நாமே அதை
எடுத்துக்கொண்டால்
அது இனிக்கும்!.
மற்றவர்கள் நமக்கு
அதை கொடுத்தால்
கசக்கும்!...
அந்த ஒற்றைக் கல்லின்
அருகில்தான் நான் நிற்பேன்
சற்று தூரத்தில்தான் நீ நிற்பாய்.
வெள்ளிக்கிழமை என்றாலே
கூந்தலை பின்னிய அழகும்
அவ்வழகை மேலும் அழகாக்கும்
மல்லிகைப்பூவும் மிக
நேர்த்தியாய் அணிந்த புடவையும் நெற்றியில்
நீயிடும் வண்ண பொட்டும்
காதோர ஜிமிக்கியும் உன்
முக ஒப்பனையும் முத்துக்களோடு
நீ சிந்தும் புன்னகையும்
வான்நிலவு ஆடையுடுத்தி
மண்ணில் வந்து
என்னை ஆளவோவெனெ
தன்னை மறந்த நிலையில் நான்
நிற்கையில் உன்னுடல் வாசனையை சுமந்து வந்து
காற்று என்னை எழுப்பும்
காதல் கவிதையை பாட
அழைக்கும்.
அவ்வொற்றைக்கல்லும்
உன்னழகில் உருகி நிற்கும்.
உன்னை பிரிந்திட
ஒரு நாளும்
ஒரு நொடியும் கூட
என்னால் இயலாது ......
என் மரணத்திற்கு
பின் மட்டுமே
உன்னால் - என்
பிரிவின் வழியை
உணர இயலும் ......
பிறந்த வீட்டை
வளர்ந்த ஊரை
படித்த பள்ளியை
வாழ்ந்த கல்லூரியை
உயிர் நண்பர்களை
அறிந்த சொந்தங்களை விட்டு
உன்னை
உன்னை மட்டுமே
நம்பி வருகிறேன் ......
உன் மனைவியாய் !!!
ஒவ்வொரு நாளும்
இரவிற்க்காக காத்திருக்கிறேன் !!!
இரவில் தான் தூக்கம் வரும் .....
தூக்கத்தில் தான் கனவு வரும் .....
கனவில் தான் நீ வருவாய் .....
உன்னில் தான் நான் உள்ளேன்.....
நம்மில் தான் காதல் உள்ளது !!!
ஒவ்வொரு முறையும் .....
நீ ஊருக்கு திரும்பும் போது ,
என்னிடம் வந்து சொல்லுவாய் ,
""போய் வருகிறேன் "" என்று !!!!
அப்போது ,
என் இதழ்கள் சொல்லும்
""போய் வா "" என்று !!!!
ஆனால் ,
என் கண்களோ ......
""என்னையும் உன்னுடன்
அழைத்து செல்""
என்று கேட்கும் ........
உன் பிரிவை தாங்கும் வலிமை இன்றி அன்பே!!!!....