Ganeshkumar Balu - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  Ganeshkumar Balu
இடம்:  Chennai
பிறந்த தேதி :  18-Aug-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Dec-2011
பார்த்தவர்கள்:  2520
புள்ளி:  312

என்னைப் பற்றி...

நெஞ்சில் பட்டதை,
பட்டை தீட்டி,
எல்லோருக்கும் புரியும்
வண்ணம் எளிமையாக்கி,
கொஞ்சம் சுவைபட,
எடுத்துரைக்க நான்
தெரிவு செய்த தளம்
இந்த எழுத்து.காம்.
Contact me at: ganeshkumar.balasundaram@gmail.com

என் படைப்புகள்
Ganeshkumar Balu செய்திகள்
Ganeshkumar Balu - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2020 1:08 am

வீட்டிலே அலுவலகம்,
கொரோனா தந்த கொடை.- வெகுசில
காலம் மட்டுமே !

வீட்டை அலுவலகமாய் மாற்றி,
குளியலும், உறங்களும் தவிர
அனைத்தும் அந்த தீடிர் மேசையின்
முன்பு தான்.

முகத்தை பார்த்து பேசும் காலம் மாறி
உறவுகளிடம் காதுகளை மட்டும்
இரவலாக கொடுத்து,
கவனத்தை கணிப்பொறியிலும்,
கணிப்பொறியில் தெரியும்
கனவான்களிடம் வைத்து...
இதனை மாதங்கள் ஓட்டியாகிற்று.

இன்னும் எத்தனை மாதங்களோ
தெரியவில்லை....
இது வரமும்  இல்லை,
சாபமும் இல்லை,
வரசாபமாக தெரியத்துடங்கிற்று...

அப்படி இருந்த ஒரு நாளில்,
காலை வேலையில்
முந்தைய நடுராத்திரியில் -விட்ட
பணியை துண்டங்க ஆயத்த மானேன்.

நான் வசித்துக

மேலும்

Ganeshkumar Balu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2020 5:30 pm

சூரியன் எப்போதும்போல உதிக்கிறது,
சித்திரை வெயில் அதே சினத்தோடு சிலாகித்திருக்கிறது,

வானத்தின் விசாலம் விரிந்ததாய் படவில்லை,
கிழக்கும் மேற்குமாய் காக்கைகள் கரைவதை விட்டு விட்டு, 
வானத்தில் வண்ணம் தீட்டுகின்றன.

உணவருந்தும் வேளையிலே,
தென்னைமரத்தில் அணில் ஒன்று சதா கத்திகொண்டே இருக்கிறது.

எந்த பறவையும் அமராத பாதானி மரத்தில்,
தினந்தோறும் பச்சை கிளிகள் காட்சியளிக்கிறது.

தெம்பாய் குலைத்து திரியும் தெரு நாய்கள்,
சோம்பிப்போன மனிதர்கள் போல், சிந்தித்தபடி உலாத்துகிறது.

மாலை வேலையில் மாற்றமே இல்லாத மஞ்சள் வெயில் மங்கி மங்கி, கல்லாய் மாறிப்போன மனதை கரைக்கிறது.

சூரியன் மறைய,
இருள்

மேலும்

Ganeshkumar Balu - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2019 5:02 pm

மின் விசிறி சுழலும் சத்தம்
காதில் விழ - கண்
விழித்தேன்.

இருட்டின்னும் அகலவில்லை.
அடிவயிறும் அலசியது.

தூங்கி எழுந்தும்
அடங்காத சலிப்பு தேகத்தை விட்டு
ஒழியவில்லை.

அசதி சுமந்த உடலை
உலுக்கி உலுக்கி நகர்த்தி
எழுந்து நின்றேன்.

ஜன்னல் கம்பியை பற்றி ,
நிமிர்ந்து நின்று,
நடையை கூட்டினேன்.

சுருங்கிய இமையோடு,
கழிப்பறை நுழைந்தேன்.

அடிவயிற்றின் அலசல் - அங்கே
அமர்ந்தவுடன் அடங்கிற்று.
அலசல் இல்லாததால் - எதுவும்
அரங்கேறவில்லை.

இடது முழங்கால் வின் வின்னென
வலிக்க தொடங்கியது,
வெகு நேரமானதை உணர்த்தியது.

நடை பயிற்சிப்பின்முயல்வோம் - என்று
முடிவெடுத்து, எழுந்து நிற

மேலும்

Ganeshkumar Balu - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2019 4:16 pm

பிரகாசமான காலைப் பொழுது,
அமைதியாய் இருந்த குறுக்குச் சந்து,
முப்பதடி சாலையின் இருபுறமும்
அடுக்கு மாடி குடியிருப்புகள்.....

தெருவிலிருந்து அண்ணாந்து பார்த்தால்,
ஒவ்வொரு ஜன்னல் அல்லது பால்கனியின் வழியே
துளிர்விட்டு தொங்கிக் கொண்டிருக்கும்
"மனி பிளான்டுகளும் ", பறிக்காத ரோஜாக்களும்...

தெருமுனை அடுக்ககத்தின் கேட்டருகில்
சலனமின்றி சாய்ந்து கிடக்கிறது
ஒரு கிழிந்த டென்னிஸ் பந்து...

எங்கிருந்து வந்திருக்கும்?
யார் வாங்கியது ?
யார் விளையாடியது ?
யார் விசிறியடித்து கிழித்தது ?
கிழிசல் கண்ணுக்கு தெரியாமலிருந்தும்,
காற்றுப்போன பந்தானதால், வீசி எறிந்திருப்பாரோ?
ஒன்றும் தெரியவில்லை !

பந்து இந்த பூ

மேலும்

Ganeshkumar Balu - Ganeshkumar Balu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2017 6:00 pm

ஆணைமலை - பொள்ளாச்சி 1986,
மார்கழி மாதம், சனிக்கிழமை,
அதிகாலை நான்கு முப்பது மணி....!

கடுங்குளிர்,
ஒரே புகை மூட்டம்,
பனித்துளி படர்ந்த சாலை,

குறு குறுவென மாடசாமி
தொள தொள காக்கி சட்டையும்,
மொற மொற காக்கி டவுசரோடு...

கட முட, கட முடவென
இரு சக்கர தகர வண்டியை,
உருட்டி நடக்கிறான் ....

வண்டியில் பொருத்தப்பட்டிருந்தது,
நான்கடி, இரண்டங்குல
ஒரு தகர மூடிபோட்ட டப்பா.

டப்பா ஒரு புறத்தில்,
தென்னை ஓலையில் உரித்தெடுத்த,
ஈக்குமாறு குச்சியாளான -
கட்ட வௌக்குமாறும்,
கிழிந்த கோணிப்பையும்,
ஒரு பை சாம்பல் பொடியும் சொருகி இருந்தன..........

மறுபுறத்தில்,
கையுறையும், ஒரு பாட்டில் மண்ண

மேலும்

நன்றி அய்யா. உங்களின் வரிகள் மேலும் என் படைப்பிற்கு வலுகூட்டி இருக்கிறது... 26-Feb-2017 9:38 pm
முன்னாள் நடப்பனைத்தும் முற்றிலும் சொல்லித்தான் நெஞ்சில் கனல்வளர்த்தீர் நோவுதே - எண்ணில்; மிகக்கொடி தே,நரக ஊழியம்; வேண்டேன் தகவில்லா வாழ்வே அவர்க்கு! 26-Feb-2017 7:24 pm
Ganeshkumar Balu - Ganeshkumar Balu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2017 4:45 pm

பின்னலிட்ட கூந்தலை
கொத்தாய் இடக்கையில் பற்றி,
வலக்கை சுட்டு விரலால்
கொஞ்சம் முடியை சொருகி
எடுத்து பிடித்துக் கொண்டேன்.

வாழையிலையில் சுருட்டியிருந்த
நான்கு முழ பூவை சுருள் விரித்து,
இரண்டாய் மடித்து,
சிறுகச் சிறுக பூச்சரத்தை
முடி இடுக்கில்,
நுழைத்துவிட்டு, உயரம் திருத்தி
முடிப்பதற்குள்.....

பொறுமையிழந்த மனைவி,
வெடுக்கென்று விலகினாள்...

இதை சற்றும் எதிர்பார்க்காத நான்,
ஒரு புறத்தின் பூச்சரத்தை,
பிடித்திழுத்தேன்.....

பாசி மணிபோல்,
பொல, பொல பொலவென பூக்கள்,
தரையில் சிதறி விழுந்தன....

வேலை இருக்கிறது விடுங்களென்று,
விறு விறுவென நகர்ந்தவள்,
தரையிலிருந்து வெண் மொ

மேலும்

நன்றி அய்யா. 12-Feb-2017 9:22 pm
வரிகள் அருமை, வாழ்த்துக்கள், - மு.ரா. 12-Feb-2017 8:07 pm
Ganeshkumar Balu அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Jul-2015 2:12 am

கரு முட்டையில் குடி புகுந்து,
கண் கால்கள் வளரப்பெற்று,
உலகத்தோடு ஒட்டி உறவாட
காத்துக்கிடந்தேன்.

வந்தது அந்த நாள்!
இடி சத்தம் போல்,
பட் பட் என்ற வெடி சத்தம்.

லேசாக கண்கள் கூசி,
வெளிச்சம் பட்டு
கிளர்ச்சி கொண்டேன்.

வெடி சத்தம் விடாமல்
கேட்ட படி இருந்தது.
கண்கள் இமை கூட்டை
இம்சிக்காமல் எட்டிப் பார்த்தது.

அன்னை அருகில் இல்லை.
என்னைப் போல் பலரும்
அன்று அவதரித்து இருந்தது,
புரிந்தது.

அவதரித்த அனைவரும்
அனாதைகள் போலும்.

கூச்சலோ கூச்சல்.
யாரோ ஒருவர் எங்களை
வாரிக் கையிலெடுத்து
வேறு இடத்துக்கு கொண்டு செல்கிறார்.

சிறய இடம்,
அதில் இறக்கிவிட்டு தாழிடுகிறார்.
நிற்க முடி

மேலும்

நன்றி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல. நிச்சயம் உங்களின் ஆலோசனையை என் அடுத்த படைப்பில் உள்ளடக்க முயற்சிப்பேன். 01-Aug-2015 12:02 am
நன்றி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல. 01-Aug-2015 12:01 am
நன்றி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல. நிச்சயம் உங்களின் ஆலோசனையை என் அடுத்த படைப்பில் உள்ளடக்க முயற்சிப்பேன். 01-Aug-2015 12:01 am
கவிதையின் கரு சிறப்பு! வழக்கம்போல் உங்களின் எள்ளல் நடை கூடியிருந்தால், வரிகள் இன்னும் சிறந்திருக்கும்.. 09-Jul-2015 12:21 am
Ganeshkumar Balu - Ganeshkumar Balu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2015 1:55 pm

நல்ல ஒரு காலை வேலையில்
மனைவி ஏதோ முனகினாள்.

நானோ மடித்திரிந்த நாளிதழை,
விரித்து செய்திகளை நோட்டமிட்டேன்.

ஏங்க?
எத்தனை முறை தொண்டதண்ணி
வத்தக் கத்தினாலும் காதுல
விழாதே? என்றாள்.

பக்கத்துக் கடையில்
டீத் தூளும்,
சின்ன தேன் பாட்டிலும்
வேணுமாம்.

மழுங்க மழுங்க பார்த்தபடி,
அலைபேசியை அலைமாரியில் வைத்துவிட்டு,
அடுக்கக தரைத்தளம் அடைந்தேன்.

ஏதோ இனம் புரியாத
சந்தோசமொன்று என்னை
இச்சிக்க செய்தது.

புன்னகை பூத்தபடி
நகரத் தொடங்கினேன்.

ரோசாப்புபூவு, ரோசாப்பு,
ரோசாப்புபூவு, ரோசாப்பு என்று
கூவுகிறாள் ஒருத்தி.

கேட்டைத் தாண்டி,
தெருவில் நிற்கிறேன்
பூக்காரி தென்படவில்

மேலும்

வரிகள் முகத்தில் புன்முறுவல் பூக்க வைக்கிறது.. இன்னுமின்னும் பெருகட்டும்.. 09-Jul-2015 12:26 am
நன்றி தோழரே. நிச்சயமாக அடுத்த படைப்பில் நீளத்தைக் குறைத்து, சுவாரஸ்யத்தைக் கூட்ட முயல்வேன். 20-Jun-2015 11:13 pm
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 20-Jun-2015 11:12 pm
நன்று தோழரே... கொஞ்சம் நீளமாக இருப்பது சுவாரஸ்யத்தை குறைக்க கூடும்... அடுத்த படைப்பில் சுவாரஸ்யத்தைக் கூட்டுங்கள்.. வாழ்த்துக்கள் தொடருங்கள். 14-Jun-2015 2:55 am
Ganeshkumar Balu - Ganeshkumar Balu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 12:31 am

எளிமையான வாழ்க்கை,
எதார்த்தமான நிகழ்வுகள்,
பெரிய பெரிய கனவுகளோ,
லட்சியங்களோ இல்லாத
இளைஞனாய் இருந்தேன் - திருமணம்
முடியும்வரை.

இன்றோடு விளையாட்டுபோல்
பத்து வருடங்கள் உருண்டோடி விட்டது.

இந்த திருமண பந்தம்,
என்னென்ன மாற்றங்கள்,
என் மீது நிகழ்த்தியுள்ளது?

யோசிக்கிறேன்.....!

கண்விழிக்கும் நேரத்தில்
மாற்றமில்லை.
கண்ணயரும் நேரமும்
என் விருப்பமே.
இதில் மாற்றம் வேண்டி - என்னவள்
செல்லச் சண்டை இடுவாளே தவிர,
செங்கொடி பிடித்தாய் நினைவில்லை.

எதுவும் படிக்கலாம்,
எப்போதும் எழுதலாம்,
இது குறைந்த நேரமே என்றாலும்,
குணவதியின் குமுறல் கேட்டதில்லை.

வாசகியாய் சிலநேரமும்,
வி

மேலும்

"ஒன்றே ஒன்றை, நிதம் நிதம் பின்பற்றுவோம், அது - யாருடைய மனதையும், எதற்க்காகவும், எந்த சூழலிலும், தெரிந்தோ, தெரியாமலோ, புண் படுத்திவிடக் கூடாது, என்பதில் கவனம் செலுத்துவோம்" நண்பரே! இதைவிட வேறென்ன வேண்டும்? நீங்கள் சாதனை வாழ்கை வாழ்கிறீர்கள் என்பதற்கு! என் உள்ளம் நிறைந்த இனிய வாழ்த்துகளும், நன்றிகளும் தங்களுக்கும், சகோதரிக்கும்.. 09-Jul-2015 12:38 am
வாழ்த்துக்கள் ! 13-Jun-2015 2:11 pm
Ganeshkumar Balu அளித்த படைப்பை (public) Anbumani Selvam மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
26-Feb-2014 11:31 pm

என் முடிவைக் கண்டு,
தாங்க முடியாத துயரம் கொண்டு,
கண்ணீர் சிந்தும் - என்
தோழர் தோழியர்க்கு,
நன்றி தெரிவிக்க - கண்ணீரையே
காணிக்கையாக்க நினைத்தேன்.

ஆனால் கண்களில் நீரின்றி,
தேகம் அழுகிபோய்,
காய்ந்து கிடந்தேன்.

ஆத்தூரில் பிறந்த,
ஒரு வறுமைக் கோட்டின்மேல்,
தத்தளிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த,
சாதாரணப் பெண் நான்.

ஆசிரியர் மகளானதாள்,
ஆர்வமாய் பயின்றேன்.
பள்ளிக் கல்வி கடந்து,
ராசிபுரத்தில் கல்லூரி அடைந்தேன்.

சாதுர்யம்,
சாமர்த்தியம் அறியாத,
ஒரு சராசரிப் பெண் நான்.

பெரிய கனவுகளோ,
புரட்சிகரமான சிந்தனையோ,
நாட்டு நடப்போ,
இப்படி எதுவும் அறியாத,
அடுப்பங்கறைப் பெண் நான்.

கிட

மேலும்

உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. 06-Mar-2014 3:41 pm
உங்கள் கருத்துக்கு நன்றி. 06-Mar-2014 3:40 pm
உங்கள் கருத்துக்கு நன்றி. 06-Mar-2014 3:40 pm
உங்கள் கருத்துக்கு நன்றி. 06-Mar-2014 3:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (111)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
ஹரி

ஹரி

பெங்களுரு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (111)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Ramani

Ramani

Trichy

இவரை பின்தொடர்பவர்கள் (111)

Viji

Viji

இந்த தி வேர்ல்ட்
மேலே