திருமூர்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  திருமூர்த்தி
இடம்:  கோபிச்செட்டிபாளையம்
பிறந்த தேதி :  15-May-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2014
பார்த்தவர்கள்:  950
புள்ளி:  677

என்னைப் பற்றி...

நான் முதுகலை முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்,பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறேன்... கவிதை எழுதுவது எனக்குப் பிடிக்கும்,மனதை உலுக்கும்போது கவிதை என்னிலிருந்து உதிர்கிறது.கருத்துப்பிழையோ,எழுத்துப்பிழையோ இருந்தால் களை எடுக்கவும்.அப்பொழுதுதான் எனது கவிதைச்செடி நன்றாகத் தழையும்..

என் படைப்புகள்
திருமூர்த்தி செய்திகள்
திருமூர்த்தி அளித்த படைப்பில் (public) Nishazam மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Jun-2016 1:28 am

செங்கரும்பின் நறுஞ்சுவையே..!
மழலை மொழியின்
நாவற்பழமே..!
என்
உயிர் மூச்சை
கணித்த தமிழே !
தாய்ப்பாலின் உதிர்த்தில்
கலந்த தமிழே !
பட்டுவிரல் தொட்டு
பூந்தமிழ் எழுதுகையிலே
உச்சிமுதல் பாதம்வரை
உடலெங்கும் சிலிர்க்கின்றதே !
சீண்டுபவர்க்கு அஞ்சாத அழகுத்தமிழே !
புரட்சியின் வேர்பாய்ந்த
மிரட்டும் தமிழே !
என் ரத்தத்தின்
ஓட்டத்தில் கொட்டும் முரசு -நீ
கவிதைக் கனிகள்
கனிந்து குலுங்கும் பழந்தமிழே !
பல்லவிகள் சரணங்கள் தப்பாத
பழகுதமிழே !
விஞ்ஞான வித்தைகளின்
வில் அம்பு -நீ
காலங்கள் கரைந்தபோதும்
விரைந்து பயணிக்கும்
நறுந்தமிழே ! - என்
சித்தம் அடங்கிய பின்னும்
கட்டை எரிகையிலே
கடைசிச்

மேலும்

தமிழ் என்றாலே தேன் என்று என்ன தோன்றுகிறது, முக்கனி சாற்றிலும் இனிய தமிழ். அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். தொடருங்கள். 28-Jun-2020 4:02 pm
வார்த்தைகளின் தோரணை அருமை 03-Jul-2017 2:30 pm
சீண்டுபவர்க்கு அஞ்சாத அழகுத்தமிழே ! புரட்சியின் வேர்பாய்ந்த மிரட்டும் தமிழே ! இன்னும் எழுதுங்கள் தோழரே. 21-Nov-2016 8:36 pm
நன்றி... மிக்க நன்றி தோழர்..கருத்தில் மகிழ்ந்தேன் 21-Nov-2016 7:54 pm
திருமூர்த்தி அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Nov-2016 5:56 pm

தேடல் சுகமானது...
_____________________

ஆகாயம் வழங்கிய
ஒற்றைத் துளியில் விழும்
உன் முகம் தேடும்
என் கண்கள் உனக்கே உனக்கானது...

நீண்டு கிடக்கும் வானில்
பொழியும் குழல் மேகத்தின்
குளிர்நடுக்கம்

தணியத் தவிக்கும்
என் உடற்சூட்டை நாடும்
ஈர்ப்பில் நிரம்பியிருக்கிறது
ஈரம் வருடும் உந்தன்
ஞாபகங்கள்...

உடலையே போர்வையாக்கி
ஆசைகளை வியர்வையாக்கி
நூற்கும் ஆனந்தத் தேடலில்
மிச்சமிருக்கிறது
நாளைக்கான தேடல்கள்...

- திருமூ

மேலும்

படிக்க இனிமையாய் இருக்கிறது . ஆனால் முற்றிலும் புரியவில்லை . படத்தைப் பார்க்கும் போது பட்டுப் பூச்சியின் தேடலோ என்று எண்ணத் தோன்றுகிறது . தெளிவு படுத்தவும் . நீண்டு கிடக்கும் வானில் பொழியும் குழல் மேகத்தின் குளிர்நடுக்கம் ----அழகிய உவமை வரிகள் **** ௪ சிறப்பு அன்புடன் ,கவின் சாரலன் 22-Nov-2016 9:49 am
தேடும் பாதையில் ஒவ்வொன்றாய் மறைந்து போகிறது நினைவுகளின் பழமை 22-Nov-2016 9:27 am
தேடல் இனிமை. 21-Nov-2016 8:24 pm
மிக்க நன்றி தோழர் ! 21-Nov-2016 7:13 pm
திருமூர்த்தி - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 6:49 pm

அதிகமாய் ஊதினான் பலூனை,
உடைந்தது-
குழந்தையின் மகிழ்ச்சி...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 22-Nov-2016 7:09 pm
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 22-Nov-2016 6:56 am
ஆகா ! மிகவும் அற்புதம் 21-Nov-2016 6:55 pm
திருமூர்த்தி - மதிவதனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 1:04 pm

நீரின்றி அமையாது இவ்வுலகு
நீ இன்றி அமையாது என் உலகு...❤

மேலும்

நன்றி அண்ணா 22-Nov-2016 8:58 am
நன்றி 22-Nov-2016 8:58 am
அன்பான காதலின் வெளிப்பாடு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 8:49 am
அருமை வாழ்த்துக்கள் ! 21-Nov-2016 6:48 pm
திருமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2016 5:56 pm

தேடல் சுகமானது...
_____________________

ஆகாயம் வழங்கிய
ஒற்றைத் துளியில் விழும்
உன் முகம் தேடும்
என் கண்கள் உனக்கே உனக்கானது...

நீண்டு கிடக்கும் வானில்
பொழியும் குழல் மேகத்தின்
குளிர்நடுக்கம்

தணியத் தவிக்கும்
என் உடற்சூட்டை நாடும்
ஈர்ப்பில் நிரம்பியிருக்கிறது
ஈரம் வருடும் உந்தன்
ஞாபகங்கள்...

உடலையே போர்வையாக்கி
ஆசைகளை வியர்வையாக்கி
நூற்கும் ஆனந்தத் தேடலில்
மிச்சமிருக்கிறது
நாளைக்கான தேடல்கள்...

- திருமூ

மேலும்

படிக்க இனிமையாய் இருக்கிறது . ஆனால் முற்றிலும் புரியவில்லை . படத்தைப் பார்க்கும் போது பட்டுப் பூச்சியின் தேடலோ என்று எண்ணத் தோன்றுகிறது . தெளிவு படுத்தவும் . நீண்டு கிடக்கும் வானில் பொழியும் குழல் மேகத்தின் குளிர்நடுக்கம் ----அழகிய உவமை வரிகள் **** ௪ சிறப்பு அன்புடன் ,கவின் சாரலன் 22-Nov-2016 9:49 am
தேடும் பாதையில் ஒவ்வொன்றாய் மறைந்து போகிறது நினைவுகளின் பழமை 22-Nov-2016 9:27 am
தேடல் இனிமை. 21-Nov-2016 8:24 pm
மிக்க நன்றி தோழர் ! 21-Nov-2016 7:13 pm
திருமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2016 5:49 pm

காற்றில் அசைந்தாடும்
செஞ்சுருள் நாணலின் நடுத்தடத்தில்
விரவியிருக்கும் துளிகள்
உன் முத்தம்...

நெற்றியில் வியர்க்கும்
அச்சத்தை ஒற்றியெடுக்கும்
உன் அளவுகோல் உதட்டில்
மொழிபெயர்ப்புகள் சிக்கலற்றவை...

சாமானியனும் புரிந்துகொள்ளும்
எளியநடை கொண்ட அவை
எனக்கு மட்டும் சிக்கலானவை...

அன்பின் பிணைப்புகள்
ஆயுளை நீட்டிக்கக்கூடியவை மட்டுமல்ல...
அமைதியையும் ஊட்டக்கூடியவையாகும்...

எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை...
வாய்ப்பவைகள் நிலைப்பதில்லை...

- திருமூ

மேலும்

கானல் பொழுது இல்லாத பொழுதை தலைப்பாக்கி இருக்கும் யதார்த்தங்களை நயமுற எழுதி உள்ளீர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:24 am
திருமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2016 11:28 am

காதலர்களின் கஜானா
----------**********-------------



நீ
அனுப்பும்
குறுஞ்செய்திகளில்
நிறைந்து இருக்கிறது
உன்னைக் காணத்துடிக்கும்
என்னுடைய ஏக்கங்கள்...
*
அவ்வப்போது ஏற்படும்
ஊடல்களில் உறுமுகிறது
தலையணை மேலிருக்கும்
என் கைபேசி...
*
நான்
தினமும்
உன்னைத்தான்
என்
வீட்டுக்கூரைச் சந்தில்
காண்கிறேன் என்பது
அந்த
நிலவிற்கு
மட்டும்தான் தெரியும்...
*
என்
இரவுகளின் வெளிச்சம்
எரிகின்ற
உன்
கண்களில் ஒளிர்கின்றன...
*
உனக்கு வலிக்குமே
என்பதனால்தான்
கசாப்புக் கடைத் தராசில்
எடைக்குப் போகாமல்
இருக்கிறது
என் இதயம் !
*
அந்த
நீலவானில்
கிழிந்து தொங்குவது
காதல் சூத்திரமல்லவோ

மேலும்

விரும்பிய வாழ்க்கைகாக காத்திருப்பது என்பது இனிமையான காலம்தான் அது! 11-Jul-2016 4:07 pm
நினைவுகளின் இனிமையில் கனவுகளும் நிறையும் செல்வமாக 18-Jun-2016 2:48 pm
திருமூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2016 11:17 am

இந்தத் தொழில விட்டிருவையா ?
-------------------------------------------------------
-திரு

தேகமெங்கும்
நீலவழிச் சாலை...
அதன் மேலே பயணிக்கும்
மெல்லிய பூங்காற்று
திரண்ட கனிகளை உரசிச்செல்கிறது...

எச்சில் ஊறிய
நாவின் சில்லிப்பு
உடற்ப்பரப்பெங்கும் நெருடுகிறது...

திராட்சை பிழிந்த
கோப்பைக்குள் மிளிர்கிறது
மோகத்தின் தழும்புகள்...

தட்டத்திலிருக்கும் ஆப்பிள்
உன் கன்னத்தில்
குதிக்கிறது என்றான்...

சிறுமூங்கிலின் துளைக்குள்
அடைத்துவைத்தேன்
பெண்மையின் நாணங்களை...

கிட்டநெருங்கி வந்தவனிடம்
உயிரற்ற பிணமாக நின்றிருந்தேன்...

அவன் கட்டி அணை

மேலும்

வார்த்தையால் சொல்ல முடியாது..அவர்களின் வாழ்நிலையை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Jun-2016 2:46 pm
திருமூர்த்தி - கவித்தாசபாபதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2016 2:49 pm


வேறு நிலாக்கள் 

மேலும்

வணக்கம் தகவலுக்கு நன்றி 27-Mar-2016 11:49 pm
'poetic grant ' கவி உரிமை என்பார்கள். நிலாக்கள் என்று அழைப்பது மிகச் சரியே. மிக அழகானது கூட. கவித்துவமானது. மேலும், அறிவியல் பூர்வமாக நோக்கினும். சூரிய மண்டலத்தில் பூமி போன்ற பல கோள்களைச் சுற்றி 26 நிலாக்கள் உலாவுகின்றன. பிற மண்டலங்களில் எத்தனையோ எண்ணற்ற நிலாக்கள் இருக்கலாம் என்று அறிவியல் சொல்கிறது. நிலாக்கள் , வானங்கள், சூரியர்கள் என்று அழைப்பது இலக்கணப் பிழையல்ல. இலக்கிய அழகு. உங்கள் கேள்வியைப் பாராட்டுகிறேன். இந்த எண்ணத்தைப் பகிர்ந்து பலர் இவ்வுண்மையை அறிய உதவுங்கள். 27-Mar-2016 3:35 pm
வேறு நிலாக்கள் ? நிலா எப்படி பன்மையில் அழைக்கமுடியும். ? சூரியனை எவ்வாறு சூரியன்கள் என அழைக்க முடியும். ? இலக்கிய இலக்கணப் பிழையல்லவா ? 27-Mar-2016 2:16 pm
திருமூர்த்தி அளித்த எண்ணத்தை (public) செ செல்வமணி செந்தில் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Feb-2016 8:47 pm

27.1.2016 மாவட்ட அளவிலான கவிதை ,கட்டுரை,பேச்சுப்போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.ஈரோடு மாவட்ட அளவில் கவிதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றேன்.அடுத்தகட்டமாக,சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி 4.2.16 அன்று காயிதே மில்லத் மகளிர் கலைக்கல்லூரிக்குச் சென்றேன்...பரிசேதும் பெறவில்லை ..வருத்தமும் இல்லை ...பங்கேற்புச் சான்றிதழ் தரப்பட்டது...சென்னையில் எனக்கு தங்குவதற்கு விடுதி ஏற்பாடு செய்து தந்த ஜின்னா அண்ணாவிற்கு மிக்க நன்றி ... தமிழுக்காகவும், படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எந்த அரசாங்கத்தையும் நாம் பாராட்டுவதில் தவறில்லை..இந்த கணத்தில் நான் தமிழக கல்வித்துறையைப் பாராட்டுகிறேன்...அதே சமயத்தில்,கவிஞனாக நான் சொல்வது என்னவெனில்,அவ்வைக்கு பரிசில்தந்த எந்த அரசரும் பரிசுப்பொருட்களில் அந்த அரசரின்  உருவப்படம் பொறித்து சான்றிதழோ,பரிசுப்பொருளோ தரவில்லை என்று நினைக்கிறேன் ...அதுபோல,இனிவரும் அரசு தந்தால் எல்லோருக்கும் முகச்சுழிவில்லாத மகிழ்ச்சி ஏற்படும் என நம்புகிறேன்..


நன்றி 
ப(து)ணிவுடன்,
 திருமூர்த்தி

மேலும்

நன்றி நட்பே ! 08-Feb-2016 1:30 pm
வாழ்த்துகள் தோழரே .. 08-Feb-2016 1:51 am
ஈரோடு தேவா அளித்த படைப்பை (public) ஆசை அஜீத் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Sep-2015 2:10 pm

என் கவிதை எனக்குள் நான்
விதைத்த ஓர் விதை,
கனவுக்குள் உறங்கிய கருத்திற்கு நான்
இட்ட ஓர் உருவம் .
பிறர் அறியா உணர்வுகள் எனக்குள்
பிரவேசிக்க நான் அடைந்த
ஓர் மாற்று பாதை- என்னுள்
எழுந்த எழுச்சி கருத்துக்கள், எழுத்துகளால் ,
உருபெற்ற ஓர் குறிப்பேடு.....
என் கவிதை எழுத்துகளால் நான் வரைந்த ஓவியம்

மேலும்

நல்ல வரிகள் !! கட்டமைப்பு கொஞ்சம் கவனித்து பதிந்து இருப்பின் கூடுதல் சிறப்பு பெற்றிருக்கும் !! 16-Feb-2016 8:43 pm
தெளிவான நடையில் மிளிர்கிறது உங்கள் கவிதை..மேலும் ,தொடருங்கள் வாழ்த்துக்கள் ! 16-Feb-2016 7:13 pm
திருமூர்த்தி அளித்த எண்ணத்தை (public) sai மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Jan-2016 11:36 am

என்னுடைய குழந்தைப் புகைப்படம் ...எனது செல்லப்பெயர் ஆனந்த்..வீட்டில்....உறவினர்கள்,நண்பர்கள்..,எங்கள் ஊர் மக்கள் எல்லோருக்குமே என்னை ஆனந்த் என்றால்தான் தெரியும்...பள்ளி கல்லூரியில் மட்டுமே எனது பெயர் திருமூர்த்தி ...எனக்கு ஆனந்த் எனற பெயர்தான் மிகவும் பிடிக்கும் ..நன்றாக ஞாபகம் இருக்கிறது ..கோபிசெட்டிபாளையம் புகைப்படக் கடையில் அப்பா இருக்கையில் அமர்ந்துகொண்டு என்னை பக்கத்தில் நிற்கவைத்து படம் எடுக்கச் சொன்னார் ..ஆனால் நான் அடம்பிடித்து தூக்கிகொள்ளச் சொன்னேன்...பிடிவாதத்தோடு அழுததால் எனது ஆசைப்படியேஅவர் தூக்கிக்கொண்டு படம் எடுத்தார் ..பாருங்கள்,அழுத முகத்தோடு எனது உதடுகள் எவ்வளவு பிதுங்கி உள்ளது என்று ...


இந்தப் புகைப்படம் எனது பழைய புத்தகங்களை தூசிதட்டி தூய்மைப் படுத்தும்போது நினைவின் அச்சில் மீண்டும் பதிப்பேறியது ....இந்த போகிப்பண்டிகையில் மலர்ந்தது எனது மழலை கனவுகள் ...

அப்பாவுக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் விருப்பம் ..அதனால்தான் என்னை இப்படி அழகாக சீவி சிங்காரித்து இருக்கிறார் ... இந்த கணம் நான் ஏதோ ஒன்றை அவரிடமிருந்து இழந்து விட்டதாக மனது உறுத்துகிறது ...

நன்றி ...

வாழ்வின் ரசனைப் பயணத்தில் ..
திருமூர்த்தி 

மேலும்

நன்றி நட்பே ..! 21-Jan-2016 11:35 am
அழகான.....படம்....ஆனந்த்...... 19-Jan-2016 8:00 pm
நன்றி தோழமையே ..! 19-Jan-2016 7:52 pm
சோ cute த அண்ணா புட்டு புட்டு நு அழகா இருக்கேங்க 18-Jan-2016 12:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (548)

இவர் பின்தொடர்பவர்கள் (563)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (554)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே