எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

27.1.2016 மாவட்ட அளவிலான கவிதை ,கட்டுரை,பேச்சுப்போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.ஈரோடு...

27.1.2016 மாவட்ட அளவிலான கவிதை ,கட்டுரை,பேச்சுப்போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.ஈரோடு மாவட்ட அளவில் கவிதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றேன்.அடுத்தகட்டமாக,சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி 4.2.16 அன்று காயிதே மில்லத் மகளிர் கலைக்கல்லூரிக்குச் சென்றேன்...பரிசேதும் பெறவில்லை ..வருத்தமும் இல்லை ...பங்கேற்புச் சான்றிதழ் தரப்பட்டது...சென்னையில் எனக்கு தங்குவதற்கு விடுதி ஏற்பாடு செய்து தந்த ஜின்னா அண்ணாவிற்கு மிக்க நன்றி ... தமிழுக்காகவும், படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எந்த அரசாங்கத்தையும் நாம் பாராட்டுவதில் தவறில்லை..இந்த கணத்தில் நான் தமிழக கல்வித்துறையைப் பாராட்டுகிறேன்...அதே சமயத்தில்,கவிஞனாக நான் சொல்வது என்னவெனில்,அவ்வைக்கு பரிசில்தந்த எந்த அரசரும் பரிசுப்பொருட்களில் அந்த அரசரின்  உருவப்படம் பொறித்து சான்றிதழோ,பரிசுப்பொருளோ தரவில்லை என்று நினைக்கிறேன் ...அதுபோல,இனிவரும் அரசு தந்தால் எல்லோருக்கும் முகச்சுழிவில்லாத மகிழ்ச்சி ஏற்படும் என நம்புகிறேன்..


நன்றி 
ப(து)ணிவுடன்,
 திருமூர்த்தி

நாள் : 7-Feb-16, 8:47 pm

மேலே