கானல் பொழுது

காற்றில் அசைந்தாடும்
செஞ்சுருள் நாணலின் நடுத்தடத்தில்
விரவியிருக்கும் துளிகள்
உன் முத்தம்...

நெற்றியில் வியர்க்கும்
அச்சத்தை ஒற்றியெடுக்கும்
உன் அளவுகோல் உதட்டில்
மொழிபெயர்ப்புகள் சிக்கலற்றவை...

சாமானியனும் புரிந்துகொள்ளும்
எளியநடை கொண்ட அவை
எனக்கு மட்டும் சிக்கலானவை...

அன்பின் பிணைப்புகள்
ஆயுளை நீட்டிக்கக்கூடியவை மட்டுமல்ல...
அமைதியையும் ஊட்டக்கூடியவையாகும்...

எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை...
வாய்ப்பவைகள் நிலைப்பதில்லை...

- திருமூ

எழுதியவர் : திருமூர்த்தி (21-Nov-16, 5:49 pm)
Tanglish : kaanal pozhuthu
பார்வை : 190

மேலே