தேடல் சுகமானது

தேடல் சுகமானது...
_____________________

ஆகாயம் வழங்கிய
ஒற்றைத் துளியில் விழும்
உன் முகம் தேடும்
என் கண்கள் உனக்கே உனக்கானது...

நீண்டு கிடக்கும் வானில்
பொழியும் குழல் மேகத்தின்
குளிர்நடுக்கம்

தணியத் தவிக்கும்
என் உடற்சூட்டை நாடும்
ஈர்ப்பில் நிரம்பியிருக்கிறது
ஈரம் வருடும் உந்தன்
ஞாபகங்கள்...

உடலையே போர்வையாக்கி
ஆசைகளை வியர்வையாக்கி
நூற்கும் ஆனந்தத் தேடலில்
மிச்சமிருக்கிறது
நாளைக்கான தேடல்கள்...

- திருமூ

எழுதியவர் : திருமூர்த்தி (21-Nov-16, 5:56 pm)
Tanglish : thedal sukamaanathu
பார்வை : 375

மேலே