நிலவுக்கு ஏன் இந்த வெட்கம்

நிலவுக்கு ஏன் இந்த வெட்கம்?

வான வெளியில்
வழக்கம் போல்
உலா வந்த
நிலவு அவள்

வீடுகளின்
உள்ளறைக்குள்
திறந்திருந்த ஜன்னல்
வழியாய் கதிர்களால்
அனுமதியின்றி
எட்டி பார்த்தவள்

எதை கண்டு
வெட்கத்தில் சிவந்த
முகமாய்
மேககூட்டத்துக்குள்
ஓடி ஒளிந்து
கொண்டாள்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Sep-25, 10:48 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 36

மேலே