நெருப்பின் நடனம் மக்களின் கோபம்

நெருப்பின் நடனம் மக்களின் கோபம்

பற்றி எரியும்
நெருப்பு
விசிறி விடும்
காற்று
ஆனந்த நடனமோ
இல்லை
ஆவேச நடனமோ?

பார்த்து கொண்டிருக்கும்
மனிதர்களின் முகங்களில்
பயம் பயம்

தள்ளி செல்ல
நினைக்கும்
எல்லாம் தொட்டு
அணைத்து பற்றி
நடனத்தை ஆடி
காட்டுகிறாள்

அவளின் ஆவேசம்
தணிக்க
சுற்றி சுற்றி
வீசும் தண்ணீர்
கடைசியில் அவளே
ஆடி களைத்து
அடங்கி போனாள்

அவள் காலடி வைத்து
ஆடிய இடமெல்லாம்
கருகிய மெருக்கு
வீசிய நாற்றம்

இழந்தைவைகளுக்காக
அழுகுரல் அழுகுரல்
மனிதர்களின் அழுகுரல்

எல்லாம் முடிந்து
தீர்ந்த பின்னால்
திடீரென பெய்த
பெரு மழை

மக்களின் கோபம்
ஆடிய நெருப்பின்
மீதல்ல
தாமதாமாய் பெய்த
இந்த மழையின் மீது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Sep-25, 10:33 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 5

மேலே