நிழலும் அவனும்

நிழலும் அவனும்

காலையில் அவசரமாய்
கிளம்புபவனை
முந்தி செல்கிறது
அவனது நிழல்

உச்சி வெயிலுக்கு
பயந்து நடந்தவனின்
காலடியில் பதுங்கி
நடக்கிறது நிழல்

மறையும் பொழுதில்
களைப்பில்
சோர்ந்து செல்பவனை
பின் தொடர்கிறது
நிழல்

முடிவாய் கழட்டி விட்ட
செருப்புடன்
நிழலையும் உதறி
விட்டு
வீட்டுக்குள் நுழைந்து
கொண்டான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (13-Sep-25, 10:05 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : nilalum avanum
பார்வை : 15

மேலே