கனவு
கனவு
கண் இமை
கதவை இழுத்து
மூடிய பின்னால்
துடிக்கும் நரம்புகளை
வருடி விட்டு
ஆழ்ந்த நிலைக்கு
சென்ற பின்பு
விரிந்த திரையில்
வெளிச்சிடும்
வண்ண வண்ண காட்சிகள்
முப்பரிமான வகையிலும்
திரையில் காட்டும் காட்சிகளாய்
சில நேரங்களில்
நாமே கதாபாத்திரமாய்
காதலும் செய்யலாம்
கலவியும் செய்யலாம்
ஏராளமான பேரை
அடித்தும் நொறுக்கலாம்
வன்முறையும் புரியலாம்
சாத்வீகத்தையும் காட்டலாம்
தணிக்கை பதிவு
இல்லை
கட்டணமில்லா
திரை காட்சிகள்
கண் இமை
கதவு திறந்து
வருடிய நரம்புகள்
விழித்து எழ
நாம் கண்ட முப்பரிமாண
திரை காட்சிகள்
மறந்து அல்லது
மறைந்து போயிருக்கும்