உணவாக நிலவு

இரவு நேரம்
வானத்தில் இருந்து
குளத்துக்கு
குடிவந்த நிலா
இலவசமாய் வெளிச்சத்தை
நீருக்குள் காட்டி
கொண்டிருக்கிறது

அதுவரை இருளுக்குள்
ஒன்றை ஒன்று
உரசியும் உரசாமலும்
சென்று கொண்டிருந்த
மீன்களும் மற்றவைகளும்
இதை
வெளிச்சமான
உணவு என்று
நினைத்து

சுற்றி வந்து
சுவைக்க முயற்சி
செய்து கொண்டே இருந்தன

விலகிய இருளுக்கு
பின் குளத்து
நீரில் மறைந்து
விட்ட நிலவு

தாங்கள் சுவைத்தே
நிலவை தீர்த்து
விட்ட திருப்தியில்
அங்கும் இங்கும்
நகர்ந்து கொண்டே
இருந்தது அத்தனையும்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Sep-25, 1:54 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : unavaaga nilavu
பார்வை : 35

மேலே