நிறைந்து செல்லும் ஆற்றின் மாயதோற்றம்

நிறைந்து செல்லும் ஆற்றின் மாயதோற்றம்
கரையை தொட்டு
செல்லும் ஆறு
ஆடாமல் அசையாமல்
நிற்கிறதோ?
எனும் மாய தோற்றம்
உற்று பார்க்க
சிறு நகர்வாய் தெரிகிறது
தொட்டு பார்த்தும்
காலை உள்ளே
வைத்து பார்த்த
பின்புதான் தெரிகிறது
யானையை கூட
அசராமல் இழுத்து
சென்று விடும்
என்பது புரிகிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (25-Sep-25, 10:38 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 11

மேலே