பெரியோர் மனம் வருந்தும் செயலைச் செய்யமாட்டார் - ஆசாரக் கோவை 40

இன்னிசை சிந்தியல் வெண்பா

உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
இறந்தின்னா செய்தக் கடைத்துங் குரவர்
இளங்கிளைஞர் உண்ணு மிடத்து. 40

- ஆசாரக் கோவை

பொருளுரை:

தமக்கு அறிமுகமாகிய புதிய சுற்றத்தார் நம் இல்லத்தில் சாப்பிடும் பொழுது மரியாதை அறிந்த பெரியோர் உயர்ந்த இடத்தில் அமர மாட்டார்.

அப்புதிய கிளைஞர் முறை தவறி இன்னாதன வற்றைச் செய்த பொழுதும் அவர்கள் மனம் வருந்தும் செயலைச் செய்யமாட்டார்.

உள்ளழிவு – உள்ளம் அழிதற்குக் காரணமாக. ‘இளங்கிளைகள்' என்றும் பாடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-25, 9:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே