கொல்லாமை நன்று கொலை,தீது - சிறுபஞ்ச மூலம் 50

நேரிசை வெண்பா

கொல்லாமை நன்று கொலை,தீ(து) எழுத்தினைக்
கல்லாமை தீது கதந்தீது - நல்லார்
மொழியாமை முன்னே முழுதுங் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி! 50

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

ஓருயிரையும் கொல்லாமை நன்மையாம், கொல்லுதல் தீமையாம், எழுத்தைக் கற்றுக் கொள்ளாமை தீமையாம், பிறரைக் கோபித்தல் தீமையாம், அறிவுடையார் தனக்குச் சொல்வதற்கு முன்பே தன்னைச் சேர்ந்தவரெல்லாரும் பழியாதவழி யொழுகுவான் பலர்க்கும் இறைவனாதற்கு உரியவன்;.

கருத்துரை:

பலர்க்குந் தலைவனாவானொருவன் சான்றோர் அறிவு சொல்லுக்கு முன்னமேயே தானேயுணர்ந்து கினைஞரைப் பழியாமை முதலியன அவற்கு நன்மையாம்.

எழுத்தினைக் கல்லாமை - கல்வியைக் கல்லாமை. கதம் - கோபம். பதி - தலைவன். ‘

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-25, 8:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே