இருபது வருசமா என் வயசு இருப்பத்து இரண்டு

ஏம்மா ஸ்ரீலக்கிஸ்ரீ ஒரு கதை தயாரா இருக்குது. அந்தப் படத்தின்

திட்டச் செலவு ஐநூறு கோடி. அந்தப் படத்தில் கதாநாயகிக்குத் தான்

முக்கியத்துவம். ஆனா ஒன்னு....

@@@@@@@

என்னங்க இயக்குநர் ஐயா (டைரெகடர் சார்)?

@@@@@@@@@@

நீ இரண்டு குழந்தைகளுக்கு ஒரு இளம் தாயா நடிக்கணும். உனக்கு


சம்மதமா?

@@@@@

ஐய்யோ நான் தாயா நடிக்கமாட்டேன்.

@@@@@@@@@@

நூற்று ஐம்பது கோடி சம்பளம்.

@@@@@@@@@@

நீங்க ஐநூறு கோடி சம்பளம் கொடுத்தாலும் நான் தாயா

நடிக்கமாட்டேன்.

@@@@@@@@@

ஏம்மா உனக்கு வயசு நாற்பத்து இரண்டு ஆகுது. ஒரு இளம் தாயா


நடிக்க ஏன் தயக்கம் காட்டற?

@@@@@

ஐயா இருபது வருசமா என் வயசு இருபத்து இரண்டு தான். என்

தோற்றத்தைப் பாருங்க. நீங்களே என்னைப் பார்த்து ஜொள்ளு

விடறதை உங்களுக்குத் தெரியாம பார்த்தவள் நான்,

இரசிகர்கள் என் தோற்றத்தை வைத்து என்னை இருபத்து இரண்டு

வயசு நடிகையாத் தான் பார்க்கிறாங்க. நம்பறாங்க. எனக்கு உலகம்


முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்கள் இருக்கிறாங்க. நான்

நீங்க சொல்லற படத்தில் தாயா நடிச்சா அப்பறம் இனிமேல் நான்

நடிக்கும் எல்லாப் படத்திலும் தாய் வேடம் தான் தருவாங்க. என்

இரசிகர்களில் 98% பேர் எனக்கு வயசு இருபத்து இரண்டுன்னு தான்

நம்பறாங்க. அந்த 2% பேரில் ஒரு சிலர் என் உண்மையான வயசு

எனக்கு

நாற்பத்து இரண்டுன்னு வாட்ஸப்பு, இன்ஸ்டாகிராம், X

தளம் போன்ற சமூக ஊடகங்களில் புரளியைக்

கிளப்பி விட்டுருக்கிறாங்க. இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத

பெரும்பாலான இரசிகர்கள் கடும் சினம் கொண்டு அந்தப்

புரளியைப் பரப்பினவங்களைக் கண்டுபிடிச்சு ஒவ்வொரு நகரிலும்

அவுங்களைத் தாக்க ஆரம்பிச்சு கைகலப்பா மாறிருச்சு.காவல்துறை

பலரைக் கைது பண்ணிட்டாங்க. என் மனசு கேட்காமல் உருக்குமா

என் இரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு அமைதி

காக்கும்படி கூறியதால் மாநிலம் எங்கும் பரவ இருந்த ஒரு பெரிய

கலவரம் ஏற்படாமல் தடுத்துட்டேன். அப்பறம் காவல்துறை

தலைவருக்கு ஒரு வேண்டுகோள் அனுப்பினேன்: "டிஜிபி சார் என்னை

வேண்டுமானால் கைது செய்யுங்க. நான் எனது மாளிகைகளில்

ஏதாவது ஒன்றி இருப்பேன். தயவுசெய்து கைது செய்த என்

இரசிகர்களை மன்னிச்சு விட்டுருங்க"ன்னு டீவீட் செஞ்சு,

வேண்டுகோள் கடிதத்தை எனது அந்தர்ங்க செயலாளர்கள் இரண்டு

பேர் மூலம் காவல்துறைத் தலைவருக்குக் கொடுத்தனுப்பினேன்.

அவர்கள் அவரது அலுவலகத்துக்கு செல்வதற்கு முன்பே கைதான

என் இரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து விடுவிச்சாங்களாம்.

இப்ப சொல்லுங்க இயக்குநர் ஐயா நான் தாயா நடிக்கணுமா? அப்படி

நான் நடிச்சா என் இரசிகர்களில் பல பேர் தற்கொலை

செய்துகொள்ள நேரிட்டால் எனக்காக தியாகம் செய்த

அவர்களை உயிர்த்தெழச் செய்ய நான் என்ன ஏசுநாதரா?

வேண்டாம் ஐயா. வேண்டாம் இந்தத் தாய் வேடம். நீங்க வேற

யாருக்காவது அந்த வாய்ப்பைக் கொடுங்கள்.

@@@@@@@

சரிம்மா ஸ்ரீலக்கிஸ்ரீ. நாங்க உன்னை நடிக்க வச்சு ஐநூறு கோடியில்

படம் தயாரிச்சு ஆயிரம் கோடி இலாபம் சம்பாதிக்கலாம்னு

பார்த்தோம். உன்னை மாதிரி ஒரு அழகான இளம் பெண்ணைக்

கண்டுபிடிக்கணும்னா பல மாநிலங்களுக்குச் சுற்றுப் பயணம்

செய்ய வேண்டியிருக்கும். சரி வர்றேம்மா ஸ்ரீலக்கிஸ்ரீ.

எழுதியவர் : மலர் (1-Nov-25, 9:35 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 12

மேலே