திருமணம் அழகானவன் எங்கே

திருமணம் அழகானவன் எங்கே?

@@@@@@@@

வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒரு


பெரியவர்: யாருடா அவன் "திருமணம்

அழகானவன் எங்கே" ன்னு கேட்டவன்?

@@@@@@@

நான் தான் தாத்தா. திருமுருகன்.

@@@@@@@

ஓ ... திருமுருகனா? வாடாப்பா. நல்லா

இருக்கிறயா?

@@@@@@

நல்லா இருக்கிறேன் தாத்தா. நீங்க நலமா

இருக்கிறீங்களா?

@@@@@@

எனக்கென்னடா கொறை. தினம் மூணு

மைல் நடக்கிறேன். உன்னை மாதிரி

இளந் தலைமுறைக்குத் தான் பக்கத்துத்

தெருவுக்குப் போகக்கூட வண்டி

தேவைப்படுது. சரி வர்ற் போது "திருமணம்

அழகானவன் எங்கே?" ன்னு கேட்டுட்டு

வந்தயே ஏன் அப்படி கேட்ட?

@@@@@@

உங்க பேரனைத் தான் தாத்தா கேட்டேன்.

@@@@@@

எம் பேரன் பேரு கல்யாணசுந்தரம். நீ

"கல்யாணசுந்தரம் எங்கே"ன்னு தானே

கேட்டிருக்கணும்?

@@@@£££

நானும் அப்படித்தான் தாத்தா கேட்டேன்.


@@@@@@

புரியலயே.

@@@@@@@

தாத்தா, 'க்ல்யாணம்'ன்னா 'திருமணம்'.

'சுந்தரம்'ன்னா அழகானவன்'. இப்பப்

புரியுதுங்களா?

@@@@@@@

டேய் திருமுருகா நீ எங்கிட்டயே உன்னோட

வேலையைக் காட்டிட்டடா.

எழுதியவர் : மலர் (31-Oct-25, 6:40 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே