சின்ன சின்ன கவிதைகள்
சின்ன சின்ன கவிதைகள்
பிரபலத்தின் சிலை
பிரபலம் புகழடைய
செதுக்கப்பட்ட சிலை
செதுக்கிய சிற்பியே
பேசப்பட்டார்
புகழுடன்
உடைந்த மெளனம்
மெளனம் சம்மதமாய்
அங்கீகரிக்கப்பட்ட பொழுது
அங்கு உடைந்த
மெளனம்
உண்மையை சொன்னது
நிராகரிப்பின் மொழிதான்
அதுவென்று
ஆற்றின் சுழிப்பு
அளவாய் ஓடும் ஆற்றின்
சுழிப்புக்கள்
அவைகள் காட்சி தரும்
அழகின் வடிவங்கள்
அளவை தாண்டி ஓடும்
ஆற்று நீரிலோ
ஆசையாய் இழுத்து
செல்லும் மரண
கிணறுகள்

