காற்றின் கண்ணாமூச்சி
#காற்றின் கண்ணாம்மூச்சி
நடமாடும் தென்றல்
கண்ணாமூச்சி ஆடுகிறது
பச்சை மரத்தில்..!
மேலெழுந்த காற்று
கண்ணாமூச்சி ஆடுகிறது
நூல்கொண்ட பட்டதில்..!
உள்ளும் வெளியுமான சுவாசத்தில்
கண்ணாமூச்சி ஆடுகிறது
மனித உயிர்களில்..!
மலர்களை வருடி அபகரித்து
கண்ணாமூச்சி ஆடுகிறது
நாசி தொடும் வாசத்தில்..!
ஒலியுடன் உறவாடி
கண்ணாமூச்சி ஆடுகிறது
மொழிகளில், இசையினில்..!
காற்றின் தனிமைக்கு
அடையாளங்கள் இல்லை
ஏதோ ஒன்றுடன் இழைகையில்
எப்படியெல்லாமோ வடிவங்களில்..!
காற்றின் கண்ணாமூச்சி
அழகுதான்
புயலாய் வீசாதவரை..!
#சொ.சாந்தி
மீள் பதிவு

