காவலாகண்ணா எமையும் கா
தேவர்கோன் ஏவிய பேய்மழைதன் னைத்தடுத்து
கோவர்த் தனத்தை குடையெனக் கையிலேந்தி
ஆவினை மேய்க்கும் அரும்கோ பரைக்காத்தாய்
காவலாகண் ணாஎமையும் கா
---ஏழுவயது கண்ணன் தூண்டுதலால்
தந்தை நந்தகோபனும் மற்ற கோபர்களும்
ஆண்டுதோறும் இந்திரனுக்குச் செய்யும்
பூசையை அவ்வருடம் விடுத்து வளம்தரும்
கோவர்த்தன மலைக்குப் பூசை செய்தனர்
வெகுண்ட தேவர் தலைவன் இந்திரன் இடைச்சேரியில்
ஒருவாரம் விடாது அடைமழை பெய்விக்கிறான்
கோபர்களையும் பசுக்களையும் கோவர்த்தன மலையை
சிண்டு விரலில் குடையாய் பிடித்து காக்கிறான் கண்ணன் .
இந்த பாகவத வரலாற்றுக் கதையை சொல்கிறது இந்த பக்தி வெண்பா
இந்த கதைக்குரிய கண்ணனின் ஆலயம்
ராஜஸ்தானின் உதயப்பூர் அருகில் உள்ள
ஸ்ரீநாத் துவார

