அடர்கருங்கூந்தல் விரிந்த அட்டகாசக் காளீ
இடர்படு மாந்தர்தம் இன்னல் களைய
சுடர்மிகு செந்நிறச் சூலம் எடுப்பாய்
அடர்கருங்கூந் தல்விரிந்த அட்டகாசக் காளீ
விடடிவெஞ்சூ லம்மறம் வீழ்த்து
பொருட் குறிப்பு :
செந்நிறச் சூலம் --வஞ்சர் நெஞ்சைக் குத்திக் குத்தி
செங்குருதி தோய்ந்த சூலம்
வஞ்சர் உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி
என்பார் அபிராமிப் பட்டர் .
மறம் --அறத்திற்குப் புறம்பான தீய செயல்

