கனவுக்காரி
ஏன் இந்த தாமதம்!!?
அவசரத்தில் என்னை சிதைத்துக்கொண்டு வெற்றி பெற விருப்பமில்லை.!
விட்டுவிடவேண்டிதானே!!
எதை விட்டு விட வேண்டும் ?? என்னுடனான கனவையா??
விட்டுவிட்டு என்ன செய்ய?
திருமணம் ….
எதற்கு? மனித பிறப்பின் கடமையை செய்து முடிப்பதாக கூறி கனவை மாய்த்து சிக்குண்டு நிற்கவா?
என் பயணம் இது.
எனக்கு இழுத்து பிடிக்கவும் தெரியும், வலையில் மாட்டாமல் நீந்தவும் தெரியும்.
பயணிக்க கற்றுக்கொண்டேன்.
திடமாகதான் இருக்கிறேன்- நீங்கள் எதுவும் வார்தையால் என்னை தீண்டாத வரை.
எனக்கு அவசரமில்லை .
அவ்வளவு அவசரமாக சென்று என் வெற்றியை நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை.
ஆமை போலவே போவோமே பிரப்பஞ்சத்தின் அசைவிற்கேற்ப.
- கௌசல்யா சேகர்

