ஸ்தோத்திரம் என்று சொல்லுங்கள்

"ஸ்தோத்திரம் என்று சொல்லுங்கள்
இயேசுவை நம்பி வாருங்கள்
சாஸ்திரம் படிக்கத் தேவையில்லை
சரித்திரம் படைக்கத் தேவையில்லை
உலகை விரும்பும் தோழர்களே !
இறைவனை விரும்பி வாருங்கள் !
ஆட்டி வைப்பவர் மனதை மாற்றிடுவார்
ஆண்டவர் நல்ல மனதை உருவாக்கிடுவார்
நம் மனதுக்கு இணக்கமாய் இருந்திடுவார்
நம் குணத்துக்கு வணக்கம் சொல்லிடுவார்
இயேசுவை நம்ப பாடுங்கள்
இயேசுவை நம்பி வாழுங்கள்
நம் விருப்பம் சொல்ல இசைந்திடுவார்
நாம் விரும்பி செல்ல அசைந்திடுவார்
ஓட்டம் பிடித்தேன் உன் உள்ளம் காண
ஓடி வந்தேன் உன் முகம் காண
இயேசுவின் இரத்தம் ஜெயமாகும்
இயேசுவின் பரிசுத்தம் ஜெபமாகும்"

எழுதியவர் : சு.சிவசங்கரி (8-Nov-25, 1:49 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 19

மேலே