சு சிவசங்கரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சு சிவசங்கரி |
இடம் | : இந்தியா |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 789 |
புள்ளி | : 143 |
கவிதைகளை மட்டுமல்ல. மற்றவர்களின் மனதையும் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். புதிதாக பிறப்பெடுப்பது போல்.
"எதிலும் நம்பிக் கையை வை !"
"பிறப்பும் இறப்பும் ஒரு முறை
மனம் இணைந்திருந்து வாழ்வோம் பல தலைமுறை"
"என் கணவா ! என் கணவா !
கனவைத் தீண்டும் திருடா !
என் கணவா ! என் கணவா !
இரவை வருடும் பகலாய்
என் நெஞ்சிலே என் நெஞ்சிலே
ஓர் ஓரமாய் உன் முத்தம் அது நித்தம்
மழை பொழியுதே மாலை பொழுதிலே
என் கைவளையலில் சிலிர்க்குதே ரோமம்
காண்கிறேன் கனிகிறேன்
கைவளையல் கழன்று ஓடும் வெகுதூரம் வெகுதூரம்....... !"
"கனவுகள் வாடும் போது காயங்கள் மலரும்
நான் தூக்கத்தைக் களவாடும் நேரம்
அங்கே கள்வர்களின் நடமாட்டம் !!"
"கண்கள் ரெண்டும் தூங்குதே
நெஞ்சம் தானா ஏங்குதே
உறவை தூக்க நினைக்குதே
உள்ளம் உருகிப் போகுதே
காலங் கெட்ட பின்னே எம் மனசு
கண்ணீரில் உயிரைக் கரைக்கப் பாக்குதே
அன்றைய வசையடியில் தூக்கம் வந்துச்சு
இன்றைய வசையடியில் தூக்கம் போச்சுது
கல்வீடு தோட்டத்துக்குள்ள
கல்லாங்கா ஆட்டமென்ன
கண்ணுக்குள்ளே ஈரம் இறங்க
நெஞ்சுக்குள்ளே பாரம் இறுக
கண்ணேறுபட்ட வாழ்க்கை
களவாடி போனதென்ன ?"
"காதலி
எனக்குக் கொடையளி !
நான் உன்னைக் கேட்கிறேன் !"
கவிதை எழுத என்ன தேவை ?
1 . கற்பனை வானமா ?
2 . காதல் நிலவா ?
3 . தத்துவ ஞானமா ?
4 . புத்தக அறிவா ?
அல்லது சொற்கள் குவிந்த அகராதியா
சேர்த்துக் கோர்த்துவிடலாமா ?.
அந்தமானும் உந்தன் அழகில் மயங்கிடும்
அந்தி நிலவுமுன் ஆசைமுகத் தைப்பார்க்கும்
சிந்தை வெளியினில் துள்ளும்எந் தன்மானே
சந்திப்போ மாநிலவின் கீழ்
அந்தமானும் உந்தன் அழகினிலே மயங்கிடுமே
அந்திநேர நிலவும் ஆசைமுகத் தைப்பார்க்கும்
சிந்தையெழில் வெளியில் துள்ளும்எந் தன்மானே
சந்திப்போ மாநாம் சந்திரன்வந் திடும்பொழுதில்
அந்தமானும் உனதுசிலை அழகினிலே மயங்கிடுமே
அந்திநேர நிலவுமுமே ஆசைமுகத் தினைப்பார்க்கும்
சிந்தையெழில் வெளியினில் துள்ளுகின்ற எனதுமானே
சந்திப்போ மாசொல்நாம் சந்திரன்வந் திடும்பொழுதில்
----முறையே இன்னிசை வெண்பா கலிவிருத்தம்
தரவு கொச்சகக் கலிப்பா
தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....