சு சிவசங்கரி- கருத்துகள்
சு சிவசங்கரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [56]
- மலர்91 [21]
- Dr.V.K.Kanniappan [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [9]
- ஜீவன் [9]
நன்றி திரு.கங்கைமணி கவியாளரே !
உங்கள் சித்தம் அது நித்தம் அனைவருக்கும் கிடைக்கட்டும் பொன்னான பாக்யம் கவி சாரலரே !
கற்பனை வானம் அதிகம் தேவை. நீங்கள் சொன்ன இவை அனைத்தும் தேவைதான். ஒவ்வொரு மனிதருக்கும் மூளையின் பக்குவமும் மனத்திட்பமும் அறிவுசிந்தனையும் கற்பனை வளமும் அன்பைப் பகிர்தலும் வெவ்வேறு விதமாக இருக்கும். இவை அனைத்தையும் தக்க வைத்துக் கொண்டு நமக்கு தெரிந்தவற்றை நாம் புரிந்தவற்றை கவிதை என்னும் பெயரில் எழுத்து என்னும் படைப்பில் வடிக்க வேண்டும். இது மற்றவர்கள் அனைவருக்கும் செய்யும் சேவை போன்று தான். கொடுப்பவருக்கும் தேடி படிப்பவருக்கும் மட்டும் தான் புரியும். மனதை இலகுவாக்கும் மனதை படிக்க வைக்கும் மனதை தேட வைக்கும் ஒரு உத்தம சேவை. எழுத எழுத நம் எழுத்துக்களை வரலாற்றில் பதிய வைக்கும்.
ஒரு கவிதையில் 'தென்றலே ! மலரை பறிக்க வந்த ஒரு பெண் என் மனதை எடுத்து சென்றுவிட்டாள். எனக்கு இருப்பதோ ஒரு மனது. நான் உன்னை பற்றிய கவிதைகளை பாட வேண்டும் என்றால் என் மனதை அவளிடம் இருந்து வாங்கி வந்து விடு. என்று மொழிந்தீர்கள்.
அதற்கு என்னால் இயன்ற பதில் கவிதை அல்லது உரையை இங்கு இயம்பலாம் என்று மொழிகிறேன்.
தென்றலின் பதில் உரை : "கவி சாரா ! நானே அவள் அழகில் மயங்கி அவள் பின்னால் சென்று கொண்டிருக்கிறேன். நான் உனக்கு வேண்டும் என்றால் உன் மனதையும் சேர்த்து அவள் மனதையும் கவர்ந்து வந்து விடு. எனக்கும் இருப்பதோ ஒரு மனது தான். என்ன அன்பரே !"
- இப்படிக்கு 'உன் தென்றல்'
நன்றி! அருமை தோழரே!
நன்றி கவி அமைச்சரே திரு கவின் சாரலன் அய்யா அவர்களுக்கு.
ஒவ்வொருவரின் வாழ்விலும் வரும் நீண்டநாள் பயணம். வழியையும் காட்டும். வலியையும் காட்டும். புரிந்து கொள்வதும் கடினம். புரியவைப்பதும் கடினம். கொடுத்துக் கொண்டே இருக்கவும் தோன்றும். பெற்றுக் கொண்டே இருக்கவும் தோன்றும். குறையும் சொல்லாது. குறைத்தும் சொல்லாது. அன்பு வலியது. காதல் வழியது. உண்மையாக வாழ்பவர்களுக்கு காதல் பேரானந்தம். இனிப்பையும் தித்திக்கச் செய்து விடும்.
நன்றி !
விகடகவி
நகுலன் நன்னன் நட்சத்திரன் நண்பன் நம்பி நளன் நரேந்திரன் நடேசன் நந்தா நாராயணன் நாதன் நித்யன் நீலகண்டன்
உள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய்! கற்பனைக்கு மணாளனாய் !!