குது குது கும்மாங்குத்து

"கலகலங்குது கலகலங்குது வளையல் சிரிப்பு
குலுகுலுங்குது குலுகுலுங்குது மயிலின் ஆட்டம்
சிலிசிலிர்க்குது சிலிசிலிர்க்குது பனிமூட்ட காத்து
தகதகக்குது தகதகக்குது கோடை வெயிலு
கிடுகிடுங்குது கிடுகிடுங்குது இடியோடு மழையாம்
சலசலக்குது சலசலக்குது வெள்ளருவி ஓட்டம்
கொக்கரிக்குது கொக்கரிக்குது சேவலின் கூவல்
பதைபதைக்குது பதைபதைக்குது பாம்பின் சீற்றம்
வெடவெடக்குது வெடவெடக்குது புலியின் உறுமல்
மணமணக்குது மணமணக்குது மல்லிகையின் வாசம்
சிடுசிடுங்குது சிடுசிடுங்குது தொட்டாச்சிணுங்கி
தித்திக்குது தித்திக்குது இனிப்பு பலகாரம்
கமகமக்குது கமகமக்குது அம்மாவின் அறுசுவை ருசியா !!"

எழுதியவர் : சு.சிவசங்கரி (19-Nov-23, 7:52 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 98

மேலே