கடனுக்குகா கவலை இலவசம்
கடனுக்குக் கவலை இலவசம் !
—
கடனுக்குக் கவலை
கட்டாயம் இலவசமே
உள்ளதுடன் வாழ்ந்தாலே
உண்டாகும் நிம்மதிமே !
கைமாற்றாய்க் கொஞ்சம்
கைநீட்டி வாங்கினாலே
கைப்பற்றும் பழக்கமது
கடைசிவரைத் தொற்றிடுமே !
வீடுநிலம் அடகுவைத்து
விவசாயம் செய்தாலோ
விளங்காதே குடும்பம்தான்
வேதனையில் மூழ்கிடுமே !
தங்கத்தைப் பணயமாக்கித்
தமையனுக்குச் செலவிட்டால்
வங்கிக்காரன் வட்டிக்காக
வாசலிலே கத்துவானே !
வாகணங்கள் அநுபவிக்க
தவணைக்குப் பெற்றதெலாம்
சோகத்தைக் கொடுத்துவிட்டு
நிறுவனத்தில் நிற்குறதே !
கழித்தலெனும் கணக்கினிலே
கற்றதனால் வந்தவினை
காலமெலாம் தொடருதையா
கடப்பதற்கோர் வழியில்லையா !!
-யாதுமறியான்.