ஹேமந்தகுமார் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : ஹேமந்தகுமார் |
| இடம் | : chennai |
| பிறந்த தேதி | : 01-May-1972 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 09-Jun-2012 |
| பார்த்தவர்கள் | : 131 |
| புள்ளி | : 49 |
Like music, Art, painting, poems, dance
நற்செயல் செய்வோரை பாராட்டி போற்றலந்த
நற்செயலை செய்வதற் கீடே
வெற்றியை பற்றும்முன் யாவரும் தோல்வியை
கற்றுப் புரிதலே நன்று
போதையில் கெட்டபாதை செல்லுமது வெற்றிநற்
பாதையில் கற்கசெய்யும் தோல்வி
அடிதடியும் ஏதுக்கடா?
01 / 01 / 2025
ஆண்டவன் யாரென்று யாருக்கும் தெரியல
ஒருவன்தான் அவனென்றால் யாருக்கும் புரியல
அல்லாவும் ஏசுவும் ஒன்றென்றால் எதுவும் இங்கு விளங்கல
அரியும் சிவனும் இரண்டல்ல அதுவும் ஒன்றும் புரியல
ஊரெல்லாம் தேடுக்கின்றாய் எங்கேயும் இல்லையடா
உனக்குள்ளே உன்னைத்தேடு உண்மையெல்லாம் விளங்குமடா
காசுபணம் கொட்டினாலும் கிடைக்கமாட்டான் தெரிஞ்சுக்கடா
நேசத்தோடு வாழ்ந்துவிடு உன்னை விடமாட்டாண்டா
இறைவனை நம்பினால் அவனை மனதார வணங்கிடடா
இயற்கையை நம்பினால் அதனை உயிராகப் போற்றிடடா
இயற்கையோ இறைவனோ இரண்டுமே ஒன்றுதானடா
உன்மனதின்படி விரும்பிநீயும் பின்பற்றி வாழ்ந்திடடா
இறந்த பிறகு இன்னும் அதிகமாய்
வீட்டை கவனிக்கிறார்
போட்டோவில் அப்பா..
முதுமையின் வருகைக்கு வெள்ளை கொடி காட்டியது தலைமுடி
அதன் கையில் கருப்புக் கொடி கொடுத்தேன் நான்.
முதுமையின் வருகைக்கு வெள்ளை கொடி காட்டியது தலைமுடி
அதன் கையில் கருப்புக் கொடி கொடுத்தேன் நான்.
பாராட்டை நிறுத்தி விட்டால்
படைப்பு சுரப்பதில்லை!
வாசிப்போர் இல்லையென்றால்
எழுத்து மலர்வதில்லை!
யார்குறித்தும் நினைக்காமல்
இயங்குவோன் கர்மயோகி!
உண்மையை உணர்ந்துகொண்டால்
அவனும் கடவுளும்
பாதி பாதி!
மீனின் பசி தூண்டில்க்காரனின் பசியை போக்கியது
இமைகளின் சுமைகளை இறக்கிவை !
—
இமைகளின் சுமைகளை
இறக்கிவை போதும்
இதயத்தின் அறைகளில்
இன்பங்கள் மோதும் !
நிகழ்ந்தவை கணத்தினில்
நீங்குதலே இயற்கை
அகழ்ந்தெடுத்து தினந்தினமும்
அவதியுறல் மடமை !
கடந்தவற்றைத் திருப்புதலோ
கவைக்குதவா வேலை
நடந்தவற்றைப் புறந்தள்ளி
நடப்பவற்றைக் கவனி !
ஒவ்வொன்றாய்க் கணங்களெலாம்
உன்னைவிட்டே செல்லும்
கவனமாகக் கைப்பற்றிக்
களித்தாலே வெல்லும் !!
-யாதுமறியான்.
ஒரு நாள்...
...கண்டேன்
...கொண்டேன்
...புரண்டேன்
...விழித்தேன்
...உணர்ந்தேன்
...உருகினேன்
...தீர்மானித்தேன்
...வரைந்தேன்
...துணிந்தேன்
...சந்தித்தேன்
...சமர்ப்பித்தேன்
...காத்திருந்தேன்
...கலங்கியிருந்தேன்
...தவித்தேன்
...துடித்தேன்
...துவண்டேன்
...ஏங்கினேன்
...எதிர்பார்த்தேன்
...கேட்டேன்
...வியந்தேன்
...மகிழ்ந்தேன்
...குதித்தேன்
...கொண்டாடினேன்
...மறந்தேன்
...பறந்தேன்
...சேர்ந்தேன்
...பற்றினேன்
...சுற்றினேன்
...கலந்தேன்
...கழித்தேன்
அந்த நாள்...
...தவிர்த்தாள்
...தயங்கினாள்
...மறைத்தாள்