இமைகளின் சுமைகள்
இமைகளின் சுமைகளை இறக்கிவை !
—
இமைகளின் சுமைகளை
இறக்கிவை போதும்
இதயத்தின் அறைகளில்
இன்பங்கள் மோதும் !
நிகழ்ந்தவை கணத்தினில்
நீங்குதலே இயற்கை
அகழ்ந்தெடுத்து தினந்தினமும்
அவதியுறல் மடமை !
கடந்தவற்றைத் திருப்புதலோ
கவைக்குதவா வேலை
நடந்தவற்றைப் புறந்தள்ளி
நடப்பவற்றைக் கவனி !
ஒவ்வொன்றாய்க் கணங்களெலாம்
உன்னைவிட்டே செல்லும்
கவனமாகக் கைப்பற்றிக்
களித்தாலே வெல்லும் !!
-யாதுமறியான்.

